பிக்பாஸ் சீசன் 5ன் வீக்கெண்ட் எபிசோடின் முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. வழக்கம்போல டிப் டாப்பாக உடையணிந்து வந்துள்ளார் கமல். அதில் மாத்தி மாத்தி உள்ள இருக்கவங்கள வேணா ஏமாத்திடலாம். ஆனால் வாத்திய ஏமாத்தவே முடியாது என தனக்கே உரிய பாடி லேங்குவேஜுடன் கொஞ்சம் அரசியலும் கலக்கிறார். (என்ன ஏராளமான வாத்திகள் உருவாகிட்டே இருக்காங்க)


கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளாமாக இருக்கு.. ஏன்னா இவங்க உடைச்ச ரூல்ஸ் ஏராளம்.. இன்னிக்கு ராத்திரி ஒவ்வொன்னா கேட்டுடலாம் என மிரட்டுகிறார் கமல்.  அப்படி என்ன கண்டெஸ்டன்ஸ மிரட்டப் போறாருனு பொறுத்திருந்து பார்க்கலாம்.


 



நேற்றைய எபிசோட் 19 தொடக்கத்திலேயே அக்‌ஷரா அழுத அழுகையை பார்த்து, சீசன் 1 பிக்பாஸ் பரணியைப்போல் எகிறிகுதிப்பாரோ என பயந்துபோய் அக்‌ஷராவை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தான் பிக்பாஸ்.. (அந்த பயம் இருக்கட்டும்). “என்னால இங்க என்னோட குணத்தோட இருக்க முடியல. ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் எல்லாம் எல்லாத்தையும் தட்டிக்கேட்டுக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை வாழ வேண்டியதுதானே. மதுவுக்கு நான் உதவி பண்ணனும்னு நினைச்சதுதான் பெரிய தப்பு. அவளாலதான் இப்போ இந்த நிலைமை எனக்கு. நல்லது பண்ணாலும் தப்பாகுது. எனக்கு எதுவும் பிடிக்கல” என்றார். எல்லாமே விளையாட்டுதானே. நீங்க நல்லா விளையாடிக்கிட்டு இருக்கீங்க என்றார் பிக்பாஸ். (அவங்க விளையாடுறாங்களோ இல்லையோ நீங்க நல்லா விளையாடுறீங்க பிக்பாஸு) நான் வீட்டுக்குப் போகணும் என்ன விட்டுடுங்க. என்ன விட்டுடுங்க பிக்பாஸ் நான் வீட்டுக்குப் போகணும்.


எல்லாரும்போல நான் கஷ்டப்படலன்னு சொல்லிட்டு யாருக்கும் என்னை இஷ்டமில்ல. என்னால என்னோட கடந்த காலத்தை மாத்தமுடியாது. இவ்வளவு கலவரம் நடந்துகொண்டிருந்தாலும், ப்ரியங்கா நிரூப் அபிஷேக் காம்போ, டாப் 5-ல நம்ம இருக்கணும். இந்த டாஸ்க் முடியும்போது எல்லாரும் நம்ம கூட வந்து ஜாய்ண்ட் அடிக்கணும் என பேசிக்கொண்டிருந்தது. (எந்த உலகத்துல இருக்காங்கன்னு தெரியலடா எப்பா) காவாலித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கு ப்ரியங்கா க்ரூப்பு என்று பேசிக்கொண்டிருந்தார் இமான். எதுக்கு இசையைக் காப்பாத்துனீங்க, ஏன் எங்க மேல அந்த ஃபீலிங் இல்லையா என கேட்டுக்கொண்டிருந்தார் பாவனி. நீங்கதானே தாமரையையும், இசையையும் காப்பாத்துவேன்னு சொன்னீங்க, அதான் நாங்க ஸ்ட்ரெய்ட்டா இசையைக் காப்பாத்துனோம் என நோஸ் கட் செய்தார் சிபி. அடுத்த சீனில், எல்லாரும் காயினை கொண்டு வந்து ப்ளாஸ்மா முன்பு காண்பிக்கச்சொன்னபோது, நிரூ, தாமரை, வருண், இசைவாணி, பாவனியிடம்தான் காயின்கள் இருந்தது உறுதியானது. (பாவனி, என்ன நடிப்பும்மா உனக்கு) நீர் - பாத்ரூம் ஏரியா, நெருப்பு - கிச்சன் ஏரியா, நிலம் - பெட்ரூம், காற்று - கார்டன் ஏரியா, ஆகாயம் - லிவிங், டைனிங் ஏரியா ஆளுமை கிடைக்கும் என்றார் பிக்பாஸ், தன் ஓலையில். இனிமேவும் திருடலாமாம் (ஷப்பா) இத்தனை நாளாக யார் யாரையோ காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டிருந்த அபிஷேக், இனி மதுமிதாவைக் காப்பாற்றுவேன் என உறுதி கொடுத்தார். (கொடுமைடா சாமி). வாடா தடிமாடு வந்து பெட்டியைத் தூக்கிக்கொடு என நிரூப்பிடம் சொல்லிக்கொண்டிருந்தார் மது.



அண்ணாச்சி தாமரையிடம் இருந்து பிடுங்கி கார்டன் ஏரியாவுக்கு ஆளுமையானார். அபிஷேக், இசையிடம் இருந்து பேசிப்பிடுங்கி கிச்சன் என்னோடது என்றார். இசை மறுபடியும் அபிஷேக்கிடமிருந்து பிடுங்கி பெட்டிக்குள் வைத்துக்கொண்டார். டாப் 5 போறதுக்கு என்ன பண்ணனும்? என நிரூப்பிடம் கேட்டார் அபிஷேக் (யப்ப்ப்பாஆஆஆஆ) அபிஷேக் தன்னையே ஆகாசம் என்றார். நிரூப் நெருப்பாம். இமான், தன்னையே நெருப்பு என்றார். அபிஷேக் கொளுத்திப் போடுகிற நெருப்பாம். பாவனி தன்னைத்தானே நீர் என்றார். காற்று அக்‌ஷராவாம். நாசம் செய்யுமாம். ப்ரியங்கா தன்னையே நீர் என்றார். காற்று ராஜுவாம். கண்ணுக்கு தெரியலயாம்.ஐய்க்கி தன்னை நிலம் என்றார்.