விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற பலரும் தற்போது பிரபலங்களாக தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.


ஆர்.ஜே.வாக அசத்தி வந்த வைஷ்ணவி பிரசாத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த 2019ம் ஆண்டு அஞ்சான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் மூலம் மேலும் பிரபலமான இவர் தனது காதல் கணவரை விவகாரத்து செய்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




அவர் பதிவிட்டுள்ளதாவது, “ 6 வருடங்களாக ஒன்றாக இருந்த நானும், அஞ்சானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன். ஆனால், நாங்கள் இருவரும் உறவின் அழுத்தம் இல்லாமல் நாங்களாகவே இருக்க, நீண்ட ஆலோசனைக்கு பிறகு பிரிவதே சிறந்தது என முடிவு செய்துள்ளோம்.










எங்களிடம் நிறைய பொதுவான குணங்கள் இருந்தாலும், நாங்கள் நண்பர்களாக இருப்பதே சிறப்பு என்பதை கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு ஆகிவிட்டது. என்ன நடந்துவிட்டது என்று யூகிக்கும் அனைவருக்கும் எங்களுக்குள் எதுவும் மோசமாக நடக்கவில்லை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம்.




தயவு செய்து எங்களுக்காக வருந்தாதீர்கள். ஏனென்றால், நாங்கள் பிரிந்ததற்கு வருந்தவில்லை. அஞ்சானும், நானும் இன்னும் நண்பர்களாக இருக்கிறோம். பெரியவர்களாகிய நாங்கள் இனி தம்பதியாக இருக்க முடியாது என்ற முடிவை யோசித்து எடுத்தோம். அதுவே எங்களுக்கு சிறந்தது. நண்பர்களாக இருப்பது எல்லாவற்றையும் விட சிறந்தது.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். வைஷ்ணவி தனது கணவரை பிரிந்ததற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண