மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்ற பிக்பாஸ் ஷோவின் சீசன் 5 முடிவடைந்தவுடனே பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நிகழ்ந்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி எப்போது சூடுபிடிக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு தற்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், 44 நாட்கள் முடிந்திருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், தகாத வார்த்தையை பேசிய அனிதா சம்பத்தின் வீடியோ வைரலானது. நிருப் அனிதாவிடம் டேபிள் மேல இரண்டு வாட்டர் பாட்டில் இருக்கு. அத எடுத்துட்டு போய் அங்க வை என்று சொல்கிறார். அப்பொழுது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென பேசிய அனிதா, வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார்.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கமெண்ட் செய்தனர். பெரும்பாலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பெண்களும், இளைஞர்களும் அதிகளவில் பார்த்து வருகின்றனர். மேலும், குழந்தைகளும் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். இப்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவ்வபோது கெட்டவார்த்தைகள் வெளிவருவது சரியாது அல்ல என பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஒரு சர்ச்சை நடந்து ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அனிதா. சக போட்டியாளர் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டிருந்த அனிதா, “நீ பேசினது ரொம்ப ஆழமான விஷயம். இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் யோசிக்க மாட்டாரு. கமல் சாராவது அஞ்சு சீசன் பாத்திருக்காரு, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிம்பு புதுசு” என தெரிவித்திருக்கிறார். சிம்புவை பற்றி அனிதா தெரிவித்த கருத்திற்கு சிம்பு ரசிகர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
வீடியோவைக் காண:
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒரு சிலர் சிகரெட் பிடிப்பது, வனிதா மற்றும் தாமரை ஒருவரை ஒருவர் மரியாதை குறைவாக திட்டிகொண்டது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. என்னதான் ஓடிடி என்றாலும் பலரும் பார்க்கும் நிகழ்ச்சிக்கு கொஞ்சமாவது கட்டுப்பாடு வேண்டாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்