தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். 

Continues below advertisement

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பல தரப்பில் இருந்தும் போட்டியாளர்களை பிக்பாஸ் களமிறக்கியது. பலரும் எதிர்பார்த்தது போலவே இந்த சீசனில் வாட்டர்மெலன் ஸ்டார் என தனக்குத் தானே பட்டம் சூட்டிக்கொண்ட திவாகர் பங்கேற்றார். 

Continues below advertisement

இவரின் செயல்பாடுகள், இன்ஸ்டா வீடியோக்கள், யூ டியூப் பேட்டிகள் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது. இதனால், தொடர்ந்து அவர் மீது விமர்சனங்கள் குவிந்தது. அந்த நெகட்டிவ் விமர்சனம் மூலமாகவே அவர் பிரபலம் ஆனார். 

பாசிட்டிவ்:

நெகட்டிவ் விமர்சனம் மூலமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் களமிறங்கியபோது அவர் மீது மிக கடுமையான விமர்சனங்களும், தாக்குதல்களும் சமூக வலைதளங்களில் நடத்தப்பட்டது. ஆனால், அவர் வீட்டில் நுழைந்தது முதலே மற்றவர்கள் அவரை ஒதுக்கும் விதமாக சில மணி நேரங்கள் நடந்து கொண்டனர். 

பின்னர், அவருக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் இடையே தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகிறது. ப்ரவீன்ராஜ் திவாகரிடம் குறட்டை விட்டதற்காக சண்டையிட்டது ப்ரவீன்ராஜுக்கு எதிராகவே அமைந்தது. மேலும், போட்டியாளர்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை காட்டிலும் திவாகரிடம் வாதம் செய்வதிலும், சண்டையிடுவதிலுமே கவனம் செலுத்தி வருகின்றனர். இது அவர்களுக்கு எதிராக அமைந்ததுடன் திவாகருக்கு ஆதரவாக மாறி வருகிறது. 

தவறை சரி செய்வாரா?

மேலும், எஃப் ஜே வயது வித்தியாசமின்றி திவாகரை வெட்டிருவேன் என்று பேசியது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதேசமயம், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் பிசியோதெரபி மருத்துவம் போட்டியாளர்கள் சிலருக்கு நல்ல உதவிகரமாக இருப்பதும் பார்வையாளர்கள் மத்தியில் அவர் மீது மதிப்பை உருவாக்கியுள்ளது. 

வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பெயரில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வந்த திவாகருக்கு தன் மீதான எதிர்மறை விமர்சனங்களை மாற்றிக் கொள்ள பிக்பாஸ் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் சரி செய்து கொள்வாரா? அல்லது தன் மீதான எதிர்மறை விமர்சனங்களை அவர் மேலும் அதிகரித்துக் கொள்வாரா? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.

மேலும், திவாகரின் சக போட்டியாளர்கள் பலரும் திவாகருடன் சண்டையிட்டால் பிரபலம் ஆகலாம், திவாகருடன் வாதம் செய்தால் பிரபலம் ஆகலாம் என்ற எண்ணத்திலே நிகழ்ச்சியில் நடந்து கொள்வதும் அவருக்கு ஆதரவாக மாறி வருகிறது. சமூக வலைதளங்களில் திவாகருக்கு ஆதரவான கருத்துக்களும், வீடியோக்களும், பதிவுகளும் பலராலும் பகிரப்பட்டு வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து காத்திருக்கும் நிகழ்வுகள்:

இந்த சீசனில் முக்கியமான போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இருப்பார் என்று கருதப்படுகிறது. அவரது செயல்பாடுகள் அவர் அடுத்த 4 வாரங்களுக்கு நிகழ்ச்சியில் தவறாமல் இருப்பார் என்பதையே உணர்த்துகிறது.