BIgg Boss Season 9 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியிம் மோசமாக நடந்துகொண்ட கம்ருதின் மற்றும் விஜே பார்வதிக்கு, சக போட்டியாளரான திவ்யா தரமான பதிலடி அளித்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
மீண்டும் சர்ச்சையான பிக்பாஸ்:
வெளிநாட்டு கலாசாரத்தை பின்பற்றி, பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான சீசனும் சர்ச்சைகளுக்கு பஞ்சமின்றி, கிட்டத்தட்ட கடைசி நாட்களை நெருங்கி வருகிறது. இதில் பல போட்டியாளர்கள் இருந்தாலும், சின்னத்திரை நடிகர் கம்ருதின் மற்றும் விஜே பார்வதி ஆகியோர் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளுக்கு ஆளாவதோடு, முகம் சுழிக்கும் வகையிலான பல செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான டிக்கெட் டூ ஃபைனலே சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் கடைசி சுற்றில் ஏற்பட்ட மோதல் தான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சாண்ட்ராவை எட்டி உதைத்து கீழே தள்ளிய பாரு, கம்ருதின்
ஒரு காருக்குள் போட்டியாளர்கள் அனைவரும் அடைக்கப்பட்டு, அதற்குள் யார் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கே அதிகபட்ச புள்ளிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் நகைச்சுவையாகவே போட்டி ஆரம்பித்தாலும், கம்ருதின் அநாவசியாமாக சாண்ட்ராவை வார்த்தைகளால் சீண்ட தொடங்கினார். அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாண்ட்ரா பேச, எல்லையை மீறி அநாகரீகமாக கம்ருதின் பேச அவருக்கு ஆதரவாக விஜே பார்வதி பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை பொதுவெளியில் சொல்ல முடியாத அளவிலான மோசமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி விமர்சிக்க தொடங்கினர். சாண்ட்ராவும் அதற்கு இணையாக பதிலடி தந்தாலும், நாகரீகம் என்பதை தாண்டி பார்வதியும், கம்ருதினும் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு எல்லையை மீறினார். அதன் உச்சகட்டமாக, இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை வலுக்காட்டாயமாக பிடித்து, உதைத்து காரில் இருந்து கீழே தள்ளினர். அப்படி விழுந்ததில் வலிப்பு மாதிரி வந்து அவர் சிரமப்பட்டபோது கூட, நடிக்கிறார் என கூறி எள்ளி நகையாடியதை எல்லாம் கண்டு நெட்டிசன்களும், பிக்பாஸ் ரசிகர்களும் உச்சகட்ட கோவத்திற்கே சென்றுள்ளார். சக போட்டியாளர்கள் நீங்கள் செய்வது தவறு என கூறினாலும், அதனை காதில் கூட வாங்காமல் பார்வதியும், கம்ருதினும் செயல்பட்டுள்ளனர்.
பதிலடி தந்த திவ்யா:
விக்ரம், சாண்ட்ராவை தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்களும் வெளியேற, பார்வதி மற்றும் கம்ருதின் உடன் சேர்ந்து திவ்யா, சுபிக்ஷா மற்றும் அரோரா ஆகியோர் மட்டும் காருக்குள் இருந்தனர். அப்போது பார்வதியை திவ்யாவை சீண்ட, ஒட்டுமொத்த காரும் குழாயடி சண்டை சூழலுக்கு மாறியது. திவ்யா பேசுகையில், “வாய மூட்றி, அசிங்கமா பண்ணிட்டு இத கேம்னு சொல்ற, மூஞ்ச பாத்தாலே வாந்தி வருது. ஏற்கனவே எடுத்த மாதிரி தான் இருக்கு. உனக்குல்லா என்ன மரியாதை கொடுக்கணும்.உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் நான் என்னடி வார்த்தைய பேசணும். உன்னை மனுஷனா பாத்தா தான் உனக்குலாம் நியாயம் பாக்கணும். 24 மணி நேரம் கூடவே இருந்து உங்க அம்மா க்ளாஸ் எடுத்தும் திருந்தாத நீ, நான் சொல்லியா திருந்த போற” என ஆவேசமாக பேசி பார்வதியையும், கம்ருதினையும் திவ்யா வாயடைக்கச் செய்தார். விடிந்த பிறகு திவ்யா தாமாக முன்வந்து போட்டியிலிருந்து விலகுவதாக கூறி காரை விட்டு இறங்கும் வரை பார்வதியும், கம்ருதினும் வாயே திறக்கவில்லை.
ஃபயர் விடும் நெட்டிசன்கள்:
நேற்றைய பிக்பாஸ் எபிசோடின் வீடியோ காட்சிகளை இணையதளத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் பலரும் பார்வதி மற்றும் கம்ருதினை வறுத்து எடுத்து வருகின்றனர். இந்த “பீடை பார்வதி மற்றும் பொறுக்கி கம்ருதினை” ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றுங்கள், குடும்பமாக பார்க்கும் நிகழ்ச்சியை மிட்-நைட் மசாலாவை போன்று மாற்றி வருகின்றனர் என ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர். அநாகரீகமாகவும், அத்துமீறியும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சக போட்டியாளர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற எந்தவித அடிப்படை அறிவு கூட இல்லாத நபர்களுக்கு திவ்யா போன்ற ஆட்கள் தான் சரி. திவ்யா பாணியில் தான் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் ஃபர் விட்டு வருகின்றனர்.