பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், பிரதீப் ஆண்டனியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சின்னத்திரையில் அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் துவம்சம் செய்யும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்த நிலையில் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 1) கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 


நடப்பு பிக்பாஸ் சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகிய 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இவர்களில் யார் 100 நாட்கள் தாக்குப்பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. 






இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் ஒரு வீடியோவில் இந்த வார கேப்டன் விஜய் வர்மா, “லியோ படத்தில் இடம் பெற்ற பேட் தாஸ் (Baddass) பாடல் பற்றி சக போட்டியாளர்களான அக்‌ஷரா உதயகுமார், ஐஷூ, விசித்ரா, ரவீனா ஆகியோர் சுற்றி அமர்ந்திருக்கும் நிலையில் பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்கும் ரவீனா, பேட் தாஸ் (Baddass) அர்த்தம் புரியாமல் கெட்ட வார்த்தையா என கேட்கிறார். 


உடனே மற்றொரு போட்டியாளரான பிரதீப் ஆண்டனி குறுக்கே வந்து விஜய் வர்மாவிடம், “கெட்ட வார்த்தை பேசிட்டிங்களா?” என கேட்க அவர் மறுத்தார். எனக்கு ஒரு ஃப்ளோல எக்கச்சக்கமாக வந்து விடும். ஒருவேளை நீங்கள் ஆரம்பித்து வைத்து விட்டால் சந்தோஷமாக இருக்கும். நான் ரொம்ப கேவலமாக பேசுவேன் என அசால்ட்டாக பதில் சொல்ல, சக போட்டியாளர்கள் அதிர்ச்சியாகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த முதல் நாளே தனக்குள் இருக்கும் மற்றொரு கேரக்டரை பிரதீப் ஆண்டனி காட்ட தொடங்கி விட்டதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.