Bigg Boss 7 Tamil: தமிழில் தற்போது அதிகம் பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் சீசன் 7. தினமும் இந்த நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. 


இந்நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன் லவ் டிராக் கண்டெண்ட் தந்து வந்த விஷ்ணு - பூர்ணிமா ஜோடி சென்ற வாரம் முழுவதும் எதிரெதிர் துருவங்களாக மாறினர். பூர்ணிமா விஷ்ணுவால் கண்ணீர் சிந்த, விஷ்ணுவோ பூர்ணிமாவைப் பற்றி மோசமாகப் பேச என சென்ற வார பிக்பாஸில் இருவரும் எதிரெதிர் அணியாக மாறி செயல்பட்டனர்.


இந்நிலையில் இன்றைய பிக்பாஸில் பூர்ணிமாவும் விஷ்ணுவும் பேசிக்கொள்கின்றனர். பூர்ணிமா பேசுகையில் ’நீங்க, தினேஷ் எல்லாம் சேர்ந்து என்ன செஞ்சீங்கனு எனக்குத் தெரியும்’ என்கின்றார். இதற்கு விஷ்ணு,’ நீ என்ன நம்புன... சாரி’ என்கிறார். அடுத்து பூர்ணிமா, ‘ ஃப்ரெண்ட்ஸ்னா என்னனு மொதல்ல அண்டர்ஸ்டேண்ட் பண்ணிக்கோங்க. வெளிய போனா நீங்க பேசுவீங்களானு கூட தெரியல’  என்கின்றார்.


அப்போது விஷ்ணு மிகவும் வருத்ததுடன் காணப்படுகின்றார். தொடர்ந்து விஷ்ணு பேசுகையில், “நான் உன்னை ரொம்பவே கஷ்டபடுத்திட்டேன். ஆனால் உன்னை கஷ்டப்படுத்தனும்னு நெனச்சு செய்யல. ஆனால் நீ செஞ்சது என்ன ரொம்பவே கஷ்படுத்திடுச்சு’ எனக் கூறிவிட்டு நடந்து செல்கின்றார்.


அப்போது பூர்ணிமா அழைக்கின்றார். ஆனால் விஷ்ணு எதுவும் பேசாமல் தனது பெட்டுக்குச் சென்று படுத்து அழுகின்றார். பூர்ணிமாவும் மிகவும் வருத்தத்துடன் காணப்படுகின்றார். இருவரும் மிகவும் கஷ்டத்துடன் காணப்படுகின்றனர். 


இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும் இருந்து வந்தது. இதனை சக போட்டியாளர்கள் விஷ்ணுவும் பூர்ணிமாவும் காதலிக்கின்றனர் எனக் கூறினர். ஆனால் இதனை இருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் முற்றிலுமாக மறுக்கவில்லை.


ஆனால் கடந்த வாரத்தில் விஷ்ணு கேப்டனான பின்னர், விஷ்ணு பூர்ணிமாவை மிகவும் காயப்படுத்தும் படியாக நடந்து கொணடதுடன். அவரது பேச்சிலும் பூர்ணிமாவை நோகடித்து வந்தார். இது ரசிகர்களுக்கும் பூர்ணிமாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கடந்த வாரத்தில் விஷ்ணு தினேஷிடம் பூர்ணிமா குறித்து பேசும் போது, “ எங்கிட்ட எல்லாம் வெச்சுகிட்டா வெச்சு செஞ்சு விட்டுடுவேன்” எனக் கூறியிருந்தார். 



ஆனால் பூர்ணிமாவோ விஷ்ணுவின் இந்த மாற்றத்தினை ஏற்றுக்கொள்ள முடியாமல், தனது தோழியும் சக போட்டியாளருமான மாயாவிடம் தொடர்ந்து தனது அதிருப்தியை வாரம் முழுவதும் வெளிக்காட்டி வந்தார். மேலும் பல நேரங்களில் அழுதுகொண்டே இருந்தார். ஆனால் இவையெல்லாம் தெரிந்த விஷ்ணு, கடந்த வாரத்தில் பூர்ணிமாவிடம் நல்லபடியாக பேசக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் இன்றைய எப்பிசோடில் விஷ்ணு மன்னிப்பு கேட்பது ஒளிபரப்பாகவுள்ளதால், பூர்ணிமாவின் ரசிகர்கள் விஷ்ணு நாமினேஷனில் இருந்து தப்பிக்க பூர்ணிமாவிடம் மீண்டும் பேச்சு கொடுக்கின்றார் எனக் கூறி வருகின்றனர். மேலும் பூர்ணிமா விஷ்ணுவை மன்னிப்பினை ஏற்பாரா இல்லையா என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.