Bigg Boss 5 Tamil Prize Money: கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 5 இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. 5-வது சீசனின் கடைசி எலிமினேஷனில், தாமரை செல்வி எலிமினேட் ஆனார். இதனால், ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இதுவரை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 4 சீசன்களை முழுதாக நிறைவு செய்திருக்கிறது. 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, கொரோனா காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் நடுவில் நடத்தப்படாமல் கைவிடப்பட்டது. முடிந்த சீசன்களில், நான்கு வெற்றியாளர்களுக்கும் தலா 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது சீசனில் வெற்றி பெற இருக்கும் போட்டியாளருக்கும் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2017 ஆரவ் 50 லட்சம் ரூபாய்
2018 ரித்விகா 50 லட்சல் ரூபாய்
2019 முகென்  50 லட்சம் ரூபாய்
2021 ஆரி 50 லட்சம் ரூபாய்

பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் யார்?

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை, ரித்விகா மட்டுமே வெற்றி பெற்றுள்ள ஒரே பெண் போட்டியாளர். சீசன் ஐந்தில் ப்ரியங்கா, பாவனி என இருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இவர்களில், ப்ரியங்காவுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனினும், பிக் பாஸ் சீசனின் வெற்றியாளர் ராஜூ எனவும், இரண்டாம் இடத்தில் ப்ரியங்கா, பாவனிக்கு மூன்றாம் இடமும், நிரூப் நான்காம் இடமும் அமீர் ஐந்தாம் இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டின் கடைசி வார டாஸ்க்கின்போது பேசிய ராஜூ, “இந்த வாய்ப்பு எனக்கு வாழ்க்கையா மாறப்போகுது. உங்க வீட்ல இப்படி ஒரு பையன் இருக்கனும்னு நெனச்சிருந்தீங்கனா அதுவே எனக்கு சந்தோஷம்” என நெகிழ்ச்சியாகப் பேசி வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கடைசி நேர மாற்றம் என சொல்லியும், எதிர்ப்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று காரணம்காட்டியும் பிக் பாஸின் வெற்றியாளர்கள் மாறிப்போவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.