கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 5 இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. 5-வது சீசனின் கடைசி எலிமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில் தாமரை செல்வி எலிமினேட் ஆனார். தொடக்கத்தில் இருந்தே கிராமத்து பெண்ணை எதிரொலிப்பதாக இருந்த தாமரைக்கு நேற்று பலர் பிரியாவிடை அளித்தனர்.
நேற்று நிகழ்ச்சியின்போது தாமரை குறித்து கமல்ஹாசனே உருகி பேசியது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தாமரை வெளியேறியது குறித்து பேசிய கமல், “இங்கு வந்தது வெற்றி இல்லை. இதை விட பெரிய வெற்றியை அடைய வேண்டும். நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் யார் வேண்டுமானாலும் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கலாம் என்ற நிலை உருவாகி இருக்கும். அது மிஸ் ஆகிட்டது” என வருத்தப்பட்டார். மேலும் மக்கள் மீது நம்பிக்கை இருக்கு. நீங்கள் வெளியே போய் ஜெயிப்பீர்கள் என்றார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை, வீட்டில் இருக்கும் போட்டியாளர்களைப் பற்றி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. ‘அமீர் உங்களை டார்கெட் செய்தாரு அத பத்தி என்ன நினைக்கிறீங்க?’ என கேட்கப்படும் கேள்விக்கு, “அத பத்தி நான் எதும் நினைக்கல. அவன் கதை கேட்ட அப்புறம் எனக்கு அவன் அம்மா மாதிரி தோனுச்சு. அதை அவன் எப்படி நினைக்கிறானு தெரியல. ஆனா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அவன் கதைய கேட்ட அன்னிக்கு நைட் எனக்கு தூக்கம் வரல. நான் அத நினைச்சு நினைச்சு ஒரு மாதிரி ஆகிட்டேன். அக்ஷராவும், ப்ரியங்காவும்தான் என்னைய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க. என் பையன் மாதிரி நினைக்க ஆரம்பிச்சுட்டேன்” என தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ன் கடைசி எலிமினேஷன் இதுதான் என்பதால், இதில் தாமரைச் செல்வி வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. சவாலான போட்டியாளரான அவர், இறுதிப்போட்டிக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்