விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். 9வது சீசனான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, கானா வினோத் என பலரும் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கானா வினோத் முகத்தில் உதைக்கப்போன ஆதிரை:
இந்த நிகழ்ச்சியில் கானா வினோத்திற்கும், ஆதிரைக்கும் நடந்த சண்டை இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவுப்பொருள் தயாரிக்கும் டாஸ்க்கின்போது கானா வினோத் தனது கால் மீது கால் போட்டு தரையில் அமர்ந்திருந்தார்.
அப்போது, அவரிடம் ஆதிரை ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், கோபத்தில் ஆதிரை கானா வினோத்தின் முகத்திற்கு நேராக தனது காலை உயர்த்தினார். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த கானா வினோத் சட்டென்று எழுந்து நின்று ஏய் என்று கத்தியதுடன் என் கால் மீது நான் கால் போடுகிறேன் உனக்கு என்ன? என்று கேட்டார்.
பெரும் சண்டை:
பின்னர், அங்கிருந்த பாட்டில் ஒன்றை எடுத்து வீசட்டா? வீசட்டா? என்று ஆதிரை கத்தினார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த கானா வினோத் பதிலுக்கு அவரும் இரண்டு பாட்டில்களை எடுத்து நான் போடவா? என்று கத்தினார். பின்னர், ஆதிரை அவரிடம் வாக்குவாதம் செய்ய கானா வினோத் என் கால் மீது நான் கால் போட்டேன் என்று கத்தினார்.
என் கால் மேல கால் போட்டேன் என்று கானா வினோத் கோபமாக கத்தினார். பின்னர், ஆதிரையிடம் உனக்கென்ன? என்று கேட்டார். கேமராவைப் பாரு என்று கேட்டார். இவர்கள் வாக்குவாதத்தின்போது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கத்தாதீங்க ப்ளீஸ் என்று கூறினார்.
இந்த சண்டை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ரசிகர்கள் பலரும் ஆதிரையை வறுத்தெடுத்து வருகின்றனர். வாக்குவாதமாக இருக்கும்போது ஒருவரின் முகத்திற்கு நேராக அவரை எட்டி உதைக்கும் நோக்கத்தில் ஆதிரை காலை தூக்கியது ஏற்க முடியாது என்று அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால், கானா வினோத்திற்கு இந்த விவகாரத்தில் ஆதரவு பெருகி வருகிறது.
ஆதிரைக்கு குவியும் விமர்சனம்:
இந்த சீசனில் ஆதிரையின் செயல்பாடுகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கானா வினோத்தின் சண்டைக்குப் பிறகு அவர் மீதான விமர்சனம் அதிகரித்து வருகிறது.
இந்த சீசனில் கனி, விக்கல்ஸ் விக்ரம், வியானா, ரம்யா, எஃப்ஜே, ப்ரவீன் உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களும் உள்ளனர். நந்தினி தனிப்பட்ட காரணங்களால் வெளியேறிய காரணங்களால் ப்ரவீன்காந்தி, அப்சரா வெளியேற்றப்பட்டனர்.