மழை நின்றாலும் தூவானம் விடாது என்பதைப் போல் பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்தாலும் அது தொடர்பான விஷயங்கள் இன்னும் முடியவில்லை. பிக்பாஸ் போட்டியில் இரண்டாவது ரன்னர் அப் அதாவது மூன்றாவது இடத்தைப் பெற்றவர் மாயா. இவர் வீட்டிற்குள் இருந்தபோது அவருக்கு இங்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக அதிகரித்தது. இணையத்தை ஆக்கிரமித்திருந்த மாயாவின் ரசிகர்கள் தங்களது அணிக்கு ”மாயா ஸ்குவாட்” என பெயரிட்டுக்கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மாயா இருக்கும்போதும் மாயா ரசிக்கும்படியாக ஏதாவது செய்தால் அதனை உடனே இணையத்தில் வைரலாக்கி மாயாவுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வந்தனர். 


மாயாவின் செயல்பாடுகள் எதிர்வினைகள் பல இடங்களில் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். குறிப்பாக அவர் கேப்டனாக இருந்தபோது அவரது நடவடிக்கைகள் அவரது ரசிகர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் இதனால், பிக்பாஸ் ரசிகர்களிடம் மாயாவுக்கான ஆதரவைப் பெறுவது எப்படி என மாயா ஸ்வாடைச் சேர்ந்தவர்களே குழம்பிப் போனார்கள். மாயாவின் பிக் பாஸ் பயணம் இப்படி பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் எல்லாம் மாயாவிற்கு அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் இயங்கியவர்கள் என்றால் அது மாயா ஸ்வாட் தான். 


இவர்களுக்கு மாயா தனது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுக்காக மாயா தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” மை டியரஸ்ட் மாயா ஸ்குவார் ஐ லவ் யூ. என்னை நீங்கள் அனைவரும் அன்பு மழையில் நனையவைத்துவிட்டீர்கள். என்னுடை தவறுகளை ஏற்றுக்கொண்டதற்கும் நான் வீட்டில் சண்டை செய்யும்போது எனக்காக நீங்களும் சண்டையிட்டுள்ளீர்கள். அதற்கெல்லாம் நன்றி. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த 105 நாட்கள் மரணப்படுக்கையிலும் மறக்காது. உங்களுக்காகத்தான் வேலை பார்க்கப்போகின்றேன். உங்களுக்குதான் இனி எல்லாமே. என்னுடன் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் என நம்புகின்றேன். என்னோட சண்டைகளில் நீங்களும் எனக்காக சண்டை செய்துள்ளீர்கள். அதற்கு கடைசிவரை நன்றியுடன் இருப்பேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. என் ரசிகராக நீங்கள் இருந்தால் என்னை மட்டும் ரசியுங்கள். மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் மற்றொருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவராக நீங்கள் இருந்தால் கூட அவர்களை வெறுக்க வேண்டாம். வேணும்னா காதலிங்க. போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். போய் நம்ம வேலைய பாக்கலாம். ஐ பிராமிஸ்; சத்தியம் செய்கின்றேன். அன்புடன் பூவுடன் - மாயா எஸ் கிருஷ்ணன்” என குறிப்பிட்டுள்ளார். 






மாயாவின் இந்த மடல்தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே மாயா, ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சானவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்து பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.