Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


பிக்பாஸ் 7 தமிழ்:


கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7ஆவது சீசன் 28-வது நாளை எட்டியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.  மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை தன் விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விசித்திரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்ஸன்,  விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்டவர்கள் நடுவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பூர்ணிமா இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதனை அடுத்து, இன்று நடக்கும் தலைவர் போட்டியில் யார் பங்கேற்பார்? யார் இந்த வாரம்  தலைவராக வருவார் என்று தெரியவில்லை.


டபுள் எவிக்ஷன்?


தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 பேர் உள்ள நிலையில், வைல்டு கார்டு மூலம் மேலும் 5 பேர் செல்லப்போவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.  வைல்டு கார்டு போட்டியாளர்கள் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்லும் அதே நேரத்தில், இரண்டு பேர் எவிக்டாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை ஒருவர் மட்டுமே வெளியேற்றப்பட்ட நிலையில்,  இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் வெளியேற்றத்துக்கான நாமினேஷன் பட்டியலில் அக்ஷயா, கூல் சுரேஷ், ஜோவிகா, விக்ரம், மணி, பிரதீப், வினுஷா, விக்ரம், யுகேந்திரன், நிக்சன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.


இதில் மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் மிகவும் குறைவான ஓட்டுகளை வினுஷா, யுகேந்திரன் பெற்றதாகத் தெரிகிறது. இதனால் இவர்கள் இரண்டு பேரும் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. வினுஷா தேவி முதல் நாளில் இருந்தே கவனம் ஈர்க்காமல் விளையாடிக் கொண்டிருப்பவர் என்று பெயர் எடுத்தார். இவர் நான்கு வாரங்கள் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம். அதேபோல, யுகேந்திரன் முதல் வாரமே வெளியே சென்றிருப்பார் என்றும், கடைசி  நேரத்தில் ஏதோ காப்பாற்றப்பட்டதாகவும் பேசப்படுகிறது. 


வைல்டு கார்டு போட்டியாளர்கள்?


2 போட்டியாளர்கள் வெளியேற்றப்படும் அதே நேரத்தில், 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக வருவார்கள். இந்த ஐந்து போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் இணையதளத்தில் இந்த போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி கானா பாலா, ஆர்ஜே பிராவோ, வி.ஜே அர்ச்சனா, சின்னத்திரை நடிகர் தினேஷ், அண்ணா பாரதி ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது