பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 3வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே சண்டை வெடிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அல்லது ஜனவரி 21 ஆம் தேதி வரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால் இன்னும் 3 மாத காலங்களுக்கு ரசிகர்களுக்கு செம எண்டர்டெயின்மெண்ட் காத்திருக்கிறது. வழக்கம்போல இந்நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த 7வது சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்ஷயா உதயகுமார், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை 2 நாட்கள் எபிசோட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் நாளில் இருந்தே பிரச்சினைகள் வெடிக்க தொடங்கி விட்டது.
இப்படியான நிலையில் 3வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் "Know your Housemates" என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் விஷ்ணு விஜய் மற்றும் மாயா கிருஷ்ணா இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்ததை கூறுகின்றனர். அப்போது பேசும் மாயா, “கமல் சாரோட நடிச்சிருக்கன்னு சொல்றாரு” என கூற, பதிலுக்கு “4.95 லட்சம் வியூவர்ஸ் இருக்காங்க எப்படி கெத்தா சொல்றாங்கன்னு பயங்கரமா டவுட்டு” என்று விஷ்ணு விஜய் கூறுகிறார். இதன் தொடர்ச்சியாக, “பிரதீப்ன்னு ஒரு சக போட்டியாளர் இருக்காரு. அவர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காம பேசுறாங்க” என்ற குற்றச்சாட்டை பிரதீப் முன்வைக்க, “அவர் என்ன எனக்கு மாமனா? மச்சானா?” என சரவெடியாக வெடிக்கிறார் மாயா கிருஷ்ணன்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் போட்டியாளர்களில் பிரதீப் ஆண்டனி பேசுகிறார். “டாபிக் தெரிஞ்சு விஷ்ணு விஜய் பேசுறாரான்னு தெரியல. அதனால் நான் மாயாவை வெரிஃபை பண்ண நினைக்கிறேன்” என தெரிவிக்கிறார். உடனே கடுப்பாகும் விஷ்ணு, ”இவர் எப்படி மத்தவங்களை பிரைன்வாஷ் பண்ணலாம்” என கேட்கிறார். இதனைத் தொடர்ந்து விஷ்ணுவிடம் பேசும் சுசித்ரா, “இந்த முறை நீ நிறைய பேரோட தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசினாய்” என விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.