பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சண்டையாகி உச்சகட்டத்தை எட்டியது. சில்லறை பையன், துரோகம் பண்ணிட்ட, செருப்பால அடிப்பேன், அசிங்கப்பட்டு போயிருவ, அம்மா மேல பொய் சத்தியம் பண்ற நீ எல்லாம் எப்படிப்பட்ட ஆளு என கூல் சுரேஷை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி பிக்பாஸ் வீட்டையே கலவரமாக்கினார்.
டென்ஷனான கூல் சுரேஷ் "எங்க அம்மாவை பத்தி தப்பா பேசிட்டான்" என பிக்பாஸிடம் கேமரா முன்னால் போய் நின்று முறையிட்டார். இப்படி பிரச்சினை நடைபெற்று வந்த நிலையில் பிக்பாஸ் இருவரையும் கன்பெஷன் ரூமுக்குள் அழைத்து சமாதானம் செய்து வைத்தார்.
இந்நிலையில் பிரதீப், கூல் சுரேஷ் இருவரும் பேசும் உரையாடல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதீப் கூல் சுரேஷிடம் பேசுகையில் "எனக்கு நீங்க முதலில் பையன் என்ற உரிமையை கொடுத்தீங்க. உங்க அம்மாகிட்ட என்னை அறிமுகப்படுத்தி வச்சீங்க. உண்மையாக என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களுடன் எப்படி பழகுவேனோ அப்படி தான் நான் உங்களுடன் பழகினேன். வேறு யாரையும் நான் மரியாதை இல்லாமல் பேசியது கிடையாது. அந்த உரிமையில் தான் நான் அப்படி பேசினேன்" என்கிறார் பிரதீப்.
"உரிமையை கொடுத்தால் மரியாதை இல்லாமல் பேசுவியா? உன்னை அசிங்க அசிங்கமா பேசவா சொன்னேன். உன்னை திருத்திக் கொள் என ஏற்கனவே நான் உன்னிடம் சொல்லி இருந்தேன்" என்கிறார் கூல் சுரேஷ்.
“உங்களை நம்பி இருந்தபோது நீங்க எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. நாம் இருவரும் பிரிந்து இருந்து பகையாளி போல தனித்தனியாக நம்மை காப்பாற்றிக் கொள்ள விளையாடலாம். இல்லை என்றால் இருவரும் சேர்ந்து ஆடலாம். என்ன பண்ணனும் எனத் தெரியவில்லை" என்கிறார் பிரதீப்.
மற்றவர்களை போல இல்லாமல் நான் இதுவரையில் உண்மையாக தான் விளையாடுகிறேன். நான் யாரிடமும் நடிக்கவில்லை. அடுத்தவர்களை கவுக்க வேணும் என எல்லாம் நான் ஒரு போதும் விளையாடியதே இல்லை" என்கிறார் கூல் சுரேஷ்.
எக்ஸ் தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வரும் இந்த உரையாடலுக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. உண்மையிலேயே கூல் சுரேஷ் நல்ல கேம் தான் விளையாடுகிறார் என்றால் பிரதீப்புக்கு எதிராக மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை ஏத்திவிட்டு ஸ்மால் பாஸ் ஹவுஸூக்கு அனுப்ப திட்டம் போட்டது எல்லாம் எந்தக் கணக்கில் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
வேறு சிலரோ பிரதீப் எப்படி மற்றவர்களை நடத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே! இதில் கூல் சுரேஷ் போட்டுக் கொடுத்து தான் அவர்களை பிரதீப்புக்கு எதிராக ஏத்தி விட வேண்டும் என எந்த அவசியமும் இல்லை என்றும், கமல்ஹாசன் வரும் எபிசோட் வரவுள்ளதால் எங்கே அவர் கிழித்து எடுத்து விடுவார் என்ற பயத்தில் தான் பேசியதற்கு எல்லாம் ஒரு காரணம் உள்ளது என்பது போல பதுங்கிப் பேசுகிறார், தான் செய்தது தப்பு என்பதை ஒத்துக் கொள்ளாமல் உரிமையில் பேசினேன் என பாவ்லா செய்கிறார் என ஒரு சிலரும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.