பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ரச்சித்தா மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகிய இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். இதனால் நெட்டிசன்கள் பலர் இவர்களை கேலி செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் சீசனிலிருந்து, ஓவியா - ஆரவ், லாலியா - கெவின், சிவானி - பாலாஜி, கேபி- ஆஜித், பாவ்னி- ஆமீர் ஆகிய பல பிரபலங்களின் லவ் ஸ்டோரியை பார்த்திருப்போம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் உணர்வு இல்லாத சீசன் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தவகையில் இந்த சீசனில், அசல் கோலார் பல பெண்களுடன் சுற்றி திரியும் மன்மதனாக வளம் வருகிறார். இவர் செய்யும் தரகுறைவான செயல்களை மக்கள் பல கண்டித்து வருகின்றனர்.
இவரின் லீலைகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கத்தில் ரச்சித்தா மகாலட்சுமி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகிய இருவரும் எப்போதும் ஒன்றாக இருந்து வருகின்றனர். இதனால் இவர்கள் ஒன்றாக இருக்கும் காட்சிகளை, வேடிக்கையாக எடிட் செய்து கண்டெண்ட் ஆக்கி வருகின்றனர். ஒரு வேள இருக்குமோ.. என்ற வகையில் இணையத்தில் பரவி வரும் இவர்களின் வீடியோக்களுக்கு பல கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
மற்றொரு வீடியோவில், உட்காருவதற்கு ஒரு பீன் பாக் ஒன்றை ராபர்ட் மாஸ்டர் கொண்டு வருகிறார். அதை பார்த்த ஷிவின், ”என்னது இது? அவங்க கீழே உட்கார மாட்டாங்களா..? ”என்று ராபர்ட் மாஸ்டரை கலாய்த்தார்.
இதற்கு முன் ராபர்ட் மாஸ்டர், வனிதாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர். இவர் “எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” என்ற படத்தை இயக்க, வனிதா இப்படத்தை தயாரித்தார். இதில் சங்கி மங்கி சங்கி மங்கியா என்ற பாடல் ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த படம் வசூல் ரீதியாக ஊத்தி மூடிய பின், இருவரின் உறவும் ஊத்தி முடியது.
அதுபோல் ரச்சித்தா, தன்னுடன் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த தினேஷ் கோபால்சாமியை மணந்தார். இருவருக்கிடையே சில மனகசப்புகள் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடதக்கது.