டிக்டாக் மூலம் பிரபலமடைந்த இவர், பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அதன் பிறகு, யூடியூப் சேனலில் லெட்டர் படித்தே எல்லோர் மனதில் இடம்பிடித்தார். பலரும் எப்போ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள் என கேட்க, அந்த கேள்விக்கு பதிலாக இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பே, நெட்டிசன்களுக்கு பல கண்டெண்ட் கொடுத்து அனைவரையும் மகிழ்வித்தார். பின், இப்போட்டியில் இணைந்த பிறகு, இவருக்கென ஜி.பி.முத்து ஆர்மி, ஜி.பி முத்து தலைவன் என பல ரசிகர் கூட்டதுக்கு சொந்தமானார்.
வித விதமாக டாஸ்குகளை கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இம்முறை லக்சரி பட்ஜெட் டாஸ்க்கிற்கு “ டான்ஸ் மாரத்தான்”எனும் நடன டாஸ்க்கை கொடுத்துள்ளது. இதில், போட்டியாளர்களில் ஒருவர், மற்றொருவரை சவால் விட்டு நடனம் ஆட அழைக்கவேண்டும். பாட்டுக்கு, சவால் விட்டவர் மற்றும் சவாலை ஏற்றவர் ஆகிய இருவரும் சேர்ந்து நடனம் ஆட வேண்டும். யார் சிறப்பாக நடனம் ஆடுகிறார்களோ அவர்களே சிறந்த போட்டியாளராக அறிவிக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெற்ற நபருக்கு 400 புள்ளிகள் கொடுக்கப்படும். மைனா நந்தினி இப்போது வீட்டிற்குள் நுழைந்ததால், அவருக்கு மட்டும் 200 புள்ளிகள் முன்பாகவே கொடுக்கப்பட்டது.
சொடக்கு மேல சொடக்கு போடுது எனும் பாடலுக்கு ஜிபி முத்து மற்றும் ஏ.டி.கே ஆகியோர் சேர்த்து குத்தாட்டம் போட, அனைவரும் அவர்களின் நடனத்தை கண்டு குதுகளித்தனர். இதற்கு முன்பாக, அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்கான ஜோடியை தேர்வு செய்தனர். கடைசியில் ராபர்ட் மாஸ்டரும்
ஜி.பி முத்துவும் இருந்ததால் இருவரும் நடனமாட இருந்தனர். பின்னர், பிக் பாஸ் அணிகளை கலைத்து, ஜி.பி முத்து மற்றும் ஏ.டி.கேவை ஒன்று சேர்த்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ன் போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.