Bigg Boss 6 Tamil Finale LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அஸிம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் (Bigg Boss 6 Tamil Grand Finale LIVE Updates) டைட்டில் வின்னர் யார் என்பதை அறிய, இறுதி நாளான இன்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் இருந்த நிலையில், இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் பிக்பாஸ் சீசன் 6க்கான டைட்டில் வின்னராக அஸிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிக்பாஸ் கோப்பையுடன் ரூ.50 லட்சம் பணம் வழங்கப்பட்டது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற விக்ரமன், ஷிவின், அஸிம் ஆகிய 3 பேரில் ஷிவினுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது - அவருக்கு சரியாக வாக்குகள் விழவில்லை என கமல் தெரிவித்ததால் ரசிகர்கள் அதிருப்தி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற விக்ரமன், ஷிவின், அஸிம் ஆகிய 3 பேரும் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மூன்றாமிடம் பிடித்து ஷிவின் வெளியேறியதாகக் கூறப்படும் நிலையில், அவர் சக போட்டியாளர் ரச்சிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கமல் வாசிக்க வேண்டிய புத்தகங்களை பரிந்துரைப்பது வழக்கம் - இதன் காரணமாக இறுதிப்போட்டியின் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ராமகிருஷ்ணன், மகுடேஸ்வரன் இருவரும் பங்கேற்றுள்ளனர்.
சென்னை பிடிக்குமா, மெட்ராஸ் பிடிக்குமா என்று கேட்டால் எனக்கு தமிழ்நாடுதான் பிடிக்கும். தமிழகம் கூட இல்லை; தமிழ்நாடுதான் பிடிக்கும் என பிக்பாஸ் அரங்கில் கமல்ஹாசன் கூறியதும் அரங்கமே அதிர்ந்தது.
அன்புத்தம்பி என அஸீமுக்கு எழுதிய கடிதத்தை தொடங்கியிருந்தார் கமல். ”உங்கள் தளராத தன்முனைப்பும் தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்கு உரியவை; அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இறுதி இலக்கை எட்டி இருக்கிறீர்கள். தவறுகளில் இருந்து திருத்திக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்ள முயற்சித்திருக்கிறீர்கள்.
மக்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. அஸீம் தன்னை அஸீமாக வெளிப்படுத்திக் கொண்டதற்கு சிலர் கொடுத்த பரிசு இது. நீங்கள் உழைத்து உயர வாழ்த்துகள்” என எழுதியுள்ளார்.
விக்ரமனுக்கு எழுதிய கடிதத்தில் “எந்த நிலையிலும் கண்ணியத்தை சரியவிடாமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சமூக நீதியையும் சமத்துவத்தையும் வளர்த்துள்ளீர்கள், வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், சொல்லும் செயலும் ஒன்றாக நடந்து காட்டியுள்ளீர்கள். நீங்களும் நானும் சேர்ந்து கொண்ட பாதையும் பயணமும் ஒன்று தான். மண், மொழி, மக்கள் காக்க என்றும் களத்தில் இருப்போம்” என கமல் பாராட்டியிருந்தார்
தனக்கு கமல் எழுதிய கடிதத்தை முதலில் எடுத்துப் படித்தார் ஷிவின். ”போட்டி, வெற்றி, புகழ், அங்கீகாரம் இவற்றையெல்லாம் தாண்டி உங்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது.
அதனை நீங்கள் செவ்வணே செய்தீர்கள். கற்களும் முட்களும் நிரம்பிய பாதையை நீங்கள் கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் உரையாடல் தொடர வேண்டும். பெருஞ்செயல்களைத் தாண்டி உங்களை விரித்துக் கொள்ள வேண்டும்” என கமல் ஷிவினை கடிதத்தில் வாழ்த்தியிருந்தார்.
தடாலடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து மூன்று ஃபைனலிஸ்டுகளையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய கமல், தன் கைப்பட எழுதிய கடிதத்தை மூவருக்கும் பரிசளித்து மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்.
“மக்கள் பிரநிதியா உள்ள வந்த உங்கள மக்கள் எப்படி பாக்கறாங்க” என கமல் எழுப்பிய கேள்விக்கு, "மக்கள் என்ன அவங்க வீட்டு பொண்ணு மாதிரி பாக்கறாங்க, பேசறாங்க. என் வாழ்க்கையே மொத்தமா மாறிடுச்சு” என மகிழ்ச்சியுடன் பதிலளித்தார் தனலட்சுமி.
”உங்க வீட்டு பொண்ணா பாக்கறவங்க கிட்ட நீங்க பிபி தனலட்சுமியா பேசறீங்களா” என குறும்புடன் கமல் எழுப்பிய கேள்விக்கு பதறியடித்து தனா மறுப்பு தெரிவித்தார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மூன்று ஃபைனலிஸ்டுகளுடன் கமல் பேசத் தொடங்கினார். “106 நாள்கள் வாழ்ந்த வீட்டை விட்டுப் போவது மன வருத்தமாக உள்ளது” என விக்ரமன் கூறினார். ”நான் எதற்காக வீட்டுக்குள் வந்தேனோ அதை 106 நாள்களில் செய்துவிட்டேன், நான் விளையாடி முடித்துள்ளேன்” என்றார் ஷிவின்.
நான் ஃபைனல் எபிசோட் வரைக்கும் வரணும்ன்னு உறுதியாக நினைத்தேன். ஆனால் போன வாரம் பழைய போட்டியாளர்கள் எல்லாரும் திரும்ப வந்தாங்க. அவங்க நிறைய விஷயங்களை பொதுவா பேசுனாங்க. அதிலிருந்து சில விஷயங்களை எடுத்து பார்க்கும்போது ஃபைனல் நமக்கு செட்டாகாது என நினைச்சேன். ஒருவேளை ஃபைனலில் ஜெயிக்கலன்னா என்ன பண்ணலாம் என நினைத்து கெத்தோடு போயிரலாம் என முடிவு பண்ணி ரூ.11.75 லட்சம் பணத்துடன் வெளியேறினேன் என அமுதவாணன் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு மீண்டும் வருகை தந்த ஜனனி, “நிறைய மக்களுக்கு என்னைத் தெரியணும்னு ஆசைப்பட்டேன். அது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நிறைவேறிடுச்சு” என்றார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி ஒளிபரப்பாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் வெள்ளை ப்ளூ உடையில் மேடையில் தோன்றினார்.
105 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி ஒளிபரப்பாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜிபி முத்து, அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி,ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மைனா நந்தினி ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு வருகை தந்துள்ளனர்.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர் ராபர்ட் மாஸ்டர் கையில் கட்டுடன் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் முதல் முறையாக 3 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கான மேடையேற உள்ளனர். விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Background
Bigg Boss 6 Tamil Grand Finale LIVE Updates:
கடந்தாண்டின் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தமாக 21 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். முதலில் 20 போட்டியாளர்கள் மட்டும் வந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி உள்ளே வந்தார்.
15 நபர்கள் வெளியேற்றம்:
இந்த போட்டியில் பங்குபெற்ற ஜி.பி. முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா, நான்காம் வாரத்தில் மகேஸ்வரி, ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி, ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர், ஏழாம் வாரத்தில் குயின்ஸி, எட்டாம் வாரத்தில் ராம் மற்றும் ஆயிஷா, ஒன்பதாம் வாரத்தில் தனலட்சுமி, பத்தாம் வாரத்தில் மணிகண்டா, பதினோராம் வாரத்தில் ரச்சித்தா மற்றும் பன்னிரண்டாம் வாரத்தில் ஏடிகே என அடுத்தடுத்து 15 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இறுதிப்போட்டி:
மீதம் இருந்த 6 நபர்களில், கதிரவன் பணப்பெட்டி டாஸ்க்கில் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர், மிட் நைட் எவிக்ஷன் முறையில், மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இந்த சீசனின் இரண்டாவது பணப்பெட்டி டாஸ்க்கில் 11,75,000 பணத்தை எடுத்துக்கொண்டு அமுதவானன் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் அஸிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் பல ஆர்மிகள் உள்ளது. இவர்கள் மூவரும் ஒன்றுக்கொன்று சலைத்தவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
அசீம் vs விக்ரம் vs ஷிவின்
விக்ரமனின் ரசிகர்கள், அவர்தான் டைட்டில் வின்னர் என ஒரு பக்கம் கூற, மறு பக்கம் அஸிமின் ரசிகர்கள் அவருக்காக பிக்பாஸ் டைட்டிலை குத்தகைக்கு எடுத்துவைத்தது போல், டைட்டில் வின்னர் அஸிம் என்ற ஹேஷ்டாகை வைரல் ஆக்கி வருகின்றனர். இவர்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட ஷிவினின் ரசிகர்கள், “தேவதை ஷிவின்”, “நீதித்தாய் ஷிவின்” என்று அவரை ட்ரெண்ட் செய்து வாக்கு பெற்று வருகின்றனர்.
இவர்களில், யார் சீசன் 6 நிகழ்ச்சியின் வின்னர், ரன்னர் என்பதை இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும். இறுதிப்போட்டியை விஜய் தொலைக்காட்சி அல்லது ஹாட்ஸ்டாரில் காணலாம். இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க உள்ளார்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -