பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தான் ஃபைனல் எபிசோட் வரைக்கும் வர வேண்டும் என்று உறுதியாக இருந்ததாக, பணப்பெட்டியுன் வெளியேறிய அமுதவாணன் தெரிவித்துள்ளார். 


பிக்பாஸ் சீசன் 6


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர்.






பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக மைனா நந்தினி உள்ளே வந்தார்.ஆரம்பம் முதலே முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்றது. இதனை கமல் பலமுறை சுட்டிக்காட்டியும் மக்களும் கடைசி வாரம் வரை அதே கருத்தை வெளிப்படுத்தி வந்தனர். 






இறுதிப்போட்டி 


இதனிடையே இறுதி வார போட்டியாளர்களாக விக்ரமன், அஸிம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி, விஜே கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் முதலில் ரூ.3 லட்சம் பணத்துடன் விஜே கதிரவன் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள 5 பேரில் ஒருவரை வெளியேற்ற திட்டமிட்ட பிக்பாஸ் மீண்டும் பணப்பெட்டி டாஸ்க்கை கொடுத்தது. இதில் ரூ.11.75 லட்சம் பணத்துடன் அமுதவாணன் வெளியேறினார். 


அமுதவாணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.  அமுதவாணன் சீக்கிரமே பிக்பாஸில் இருந்து வெளியேறி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் டாஸ்க்கில் வென்று அசத்தியிருந்தார். ஆனால் அவர் பணப்பெட்டியுடன் வெளியேறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 


சக போட்டியாளர்கள் காரணமா? 


இந்நிலையில் இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில் கமல்ஹாசன் அமுதவாணனிடம் ஏன் பணப்பெட்டியை எடுத்தீர்கள் என்ற கேள்வியை கேட்டார். அதற்கு, “நான் ஃபைனல் எபிசோட் வரைக்கும் வரணும்ன்னு உறுதியாக நினைத்தேன். ஆனால் போன வாரம் பழைய போட்டியாளர்கள் எல்லாரும் திரும்ப வந்தாங்க. அவங்க நிறைய விஷயங்களை பொதுவா பேசுனாங்க. அதிலிருந்து சில விஷயங்களை எடுத்து பார்க்கும்போது ஃபைனல் நமக்கு செட்டாகாது என நினைச்சேன். ஒருவேளை ஃபைனலில் ஜெயிக்கலன்னா என்ன பண்ணலாம் என நினைத்து கெத்தோடு போயிரலாம் என முடிவு பண்ணி ரூ.11.75 லட்சம் பணத்துடன் வெளியேறினேன்” என தெரிவித்துள்ளார்.