பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தமிழ்நாடு என்ற வார்த்தையை குறிப்பிட்டு கமல் பேசிய நிகழ்வு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி,விக்ரமன் மற்றும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆரம்பம் முதலே முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்றது. ஆனாலும் திரை பிரபலங்கள் தவிர்த்து மக்கள் போட்டியாளர்களும் முதல்முறையாக களம் கண்டதால் பார்வையாளர்கள் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர்.
இறுதிப்போட்டி
இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது. விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் உள்ள நிலையில், இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே நீங்கள் வாழ்க்கைப் பாடத்துக்கான கேள்விகளை என்னிடம் கேட்கலாம். அதற்கு நான் பதில் சொல்கிறேன் என கமல் தெரிவித்தார்.
அப்போது பிக்பாஸ் போட்டியாளரான அசல் கோலார் கமலிடம், “இந்த நிலம் மெட்ராஸ் ஆக இருக்கும் போது படம் பண்ணிருக்கீங்க..மக்கள் கொண்டாடுனாங்க..இப்ப சென்னையா இருக்கு..படம் பண்ணிட்டு இருக்கீங்க..மக்கள் கொண்டாடுறாங்க.. இந்த ரெண்டுல இது உங்களுக்கு பிடிச்சது? என கேட்டார்.
அதற்கு, எனக்கு கோபத்துல சொல்றேன்னு நினைக்க வேண்டாம். போட்டிக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு பிடிச்சது “தமிழ்நாடு”. தமிழகம் கூட இல்ல.. தமிழ்நாடு தான் பிடிச்சது. தமிழ்நாடு என்று ஒத்துக் கொண்டால் அந்த உச்சரிப்பு தானாக வந்துவிடும் என கமல் பதிலளித்தார்.