Bigg Boss 6 Tamil: ‛இனி நான் வேறு ஆயிஷா...’ அசந்து போய் பார்க்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

Bigg Boss 6 Tamil : எப்போதும் சண்டை போட்டு, அழுதுக்கொண்டு இருக்கும் ஆயிஷா இப்போது புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளார்.

Continues below advertisement

பிக்பாஸ் போட்டியாளரான ஆயிஷா புத்துணர்ச்சியுடன் புதுவிதமாக செயல்பட ஆரம்பித்து இருக்கிறார். இந்த உத்வேகத்தை சக போட்டியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

Continues below advertisement

நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரத்தில் அசல் கோலாருக்கும் ஆயிஷாவிற்கும் முட்டிக்கொண்டது. பின், அழுதுக்கொண்டு சோகமான எமோஷனல் கேரக்டராக வளம் வந்தார் ஆயிஷா. இவருக்கு ஆறுதலாக ஷெரினா மட்டுமே இருந்தார். இந்த சீசனில், இணை பிரியாத சகோதரிகள் போல ஆயிஷாவும் ஷெரினா சாமும் ஒன்றாக சுற்றி வந்தனர். இருவரும் மலையாளத்தில் உரையாடியதால்,  அதை பார்த்த தமிழ் நேயர்கள் மொழி புரியாமல் “பிக் பாஸ், கொஞ்சம் இந்த இரண்டு மலையாள சேச்சிகளுக்கு சப் டைட்டில் கொடுங்கள்” என்று கேட்டு வந்தனர்.

நேற்று, எல்லோரையும் வைத்து செய்த கமல்,   மலையாளத்தில் எழுதப்பட்ட எலிமினேஷன் கார்ட்டை காட்டி ஷெரினா சாமினை வெளியேற்றினார். அதுபோக, ஆயிஷாவையும் சூசகமாக எச்சரித்தார்.முந்தைய வாரத்தில், கமலிடம் “சார் தயவு செய்து என்னை தவறாக சித்தரிக்காதீர்கள்” என்று சொல்லி அவரை எதிர்த்து பேசினார்.

தோழி வெளியேறியதால் சற்று சோகத்தில் இருந்த ஆயிஷா, கொஞ்சம் நேரம் கழித்து பாட்டரி போட்ட பொம்மை போல் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார். அவரே தானாக வந்து, இந்த வார கேப்டன் மைனா நந்தினியிடம், க்ளீனிங் டீம் தலைவர் பொறுப்பை கொடுங்கள் என கேட்டு வாங்கியுள்ளார். இதை கண்ட சக போட்டியாளர்கள், அவரின் மாற்றத்தை வரவேற்றுள்ளனர்.

 

இப்போது, ஆயிஷா ட்ரெண்டாகி வருகிறார், இவரை ஆதரிக்கும் வகையில் புது புது மீம்ஸ்கள், சோஷியல் மீடியாயெங்கும் பரவி வருகிறது.  “ ஹே சோட்டு, குஷ்கா கேன்சல், பிரியாணி கொண்டுவா.. ஆயிஷாவிற்கு வெடிய போடுங்க” என பிக்பாஸ் ரசிகர்கள் அவர்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 17  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

Continues below advertisement