பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதுமாக, டி.வி சேனலாக மாறி புது புது டாஸ்குகளை செய்ய போகிறது என்பது நேற்றைய ப்ரோமோவில் தெரிய வந்தது. அந்த வகையில், ராசி பலன்கள் நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அனைத்தும் நன்றாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், குறுக்கால அந்த கெளசிக் வந்தான் என்பது போல் வந்தது பட்டிமன்றம். அந்த பட்டிமன்றத்திற்கு நடுவராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டார். விவாத நிகழ்ச்சியில், சக போட்டியாளர்களை பற்றி மற்றவர்கள் விமர்சித்து வந்தனர். அங்கு துவங்கியது புது பிரளயம். அசீம் மற்றும் தனலட்சுமிக்கு வாக்குவாதம் நடக்க, மற்றொரு புறம் மகேஷ்வரியிடம் குறைகளை கூறி, நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார் அசீம். டாஸ்குகளுடன் இந்த சண்டை நிற்காமல், படுக்கும் அறை வரை சென்றது. பகல் இரவு என பார்க்காமல், சதா 24 மணிநேரமும் தம் கட்டி சண்டை போட்டு வருகின்றனர்.
அசீமும், தனலட்சுமியும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்தனர். கடுப்பான தனம், ஒரு கட்டத்தில் அழுக துவங்கி வெளியே சென்று கத்தி கதற துவங்கினார். “ எல்லா வாரமும் என்னயே ஏதாவது செய்துகொண்டு இருந்தால் நான் என்னதான் செய்வேன்” என்று புலம்பினார்.
பின், இன்று வந்த ப்ரோமோவில் மற்றவர்களிடம் உள்ள குறைகளை சொல்லும் டாஸ்க் துவங்கியது. இதை அவர்கள் மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்பதே நிகழ்ச்சியின் நோக்கம். “உன்னை சீக்கரமாக ட்ரிகர் செய்யமுடியும், உன்னிடம் பேசவே முடியாது என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது, யோசித்து பேசு, சாரி கேட்டு பார்த்ததில்லை, அவமான படுத்த கூடிய வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்,பொருமை என்பது உன்னிடம் இருந்தால் வேற லெவலில் இருக்கும் என எனக்கு தோன்றுகிறது.” என தனலட்சுமியை பற்றி சில கருத்துகளை அவரின் சக போட்டியாளர்கள் கூறினர்.
முதல் வாரத்தில் கோபத்துடன் காணப்பட்ட தனலட்சுமி, பின்னர் இரண்டாவது வாரத்தில் பொறுமையாக இருந்து, கமலிடம் நல்ல பெயரை வாங்கினார். தற்போது, வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல, மீண்டும் கோவப்பட துவங்கியுள்ளார் தனம்.