பிக்பாஸ் நிகழ்ச்சியின், ராஜவம்சம் டாஸ்க் தொடர்பான இன்றைக்கான மூன்று ப்ரோமோக்கள் வெளியாகிவுள்ளது. அவற்றின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
இந்த வாரத்திற்கான டாஸ்க்காக “ராஜ வம்சமும் அருங்காட்சியகமும்” என்ற விளையாட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில், பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறவுள்ளதாகவும், இதில் ஹவுஸ்மேட்டுகள் மூன்று அணிகளாக பிரிய வேண்டும் என்ற விதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் நடக்கவுள்ள டாஸ்க்கின் அறிமுகமாக முதல் ப்ரோமோ அமைந்தது. ராஜ அலங்காரத்தில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தி வர, ராணி வேடம் அணிந்த ரச்சித்தா சாப்பாட்டில் வெறும் உப்பு மட்டும்தான் உள்ளது என்று தட்டை வீசுகிறார். அதற்கு அடுத்து, ராபர்ட் மாஸ்டரும் கோபப்பட்டு தட்டை தூக்கி எரிகிறார்.
இரண்டாவது ப்ரோமோவில், ராஜ குருவாக வேடம் அணிந்த விக்ரமனை பார்த்து, எச்சில் துப்பிய உணவை உண்ணுங்கள் என அசிம் சொல்கிறார். அவ்வளவுதான், எரிமலையாக பொங்கி எழுந்தார் விக்ரமன். அடித்து கொள்ளாத குறையாக இருவரும் கைநீட்டி வாக்குவாதம் செய்தனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களை சமதானம் செய்ய முயற்சி செய்தனர்.
தோல்வியுற்ற அந்த முயற்சியினால், இவர்களின் அந்த எச்சில் சண்டை மூன்றாவது ப்ரோமோ வரை நீண்டு சென்றது. “வாயா போயா என்று என்னை அழைக்கிறாய்” என விக்ரமன் கேள்வி கேட்க, “நீ கூடதான் என்னை ஏய் என்று அழைக்கிறாய்”என அசிம் பதிலளித்தார். பிறகு, உப்பு போட்டது நீதான் என்று ஷிவினை கைகாட்டுகிறார் அசிம். இருவரிடையே மூண்ட சண்டையில், ஷிவின் ஆஜராக மூன்றாவது ப்ரோமோ நிறைவடைந்தது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 16 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.