சனி ஞாயிறு பஞ்சாயத்திற்கு பின் சோகமாக இருந்து வரும் தனலட்சுமிக்கு ஆயிஷா அட்வைஸ் கொடுத்து உள்ளார்.


பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே தனலட்சுமி பற்றி மக்களிடையே நெகட்டிவான கருத்துக்கள் நிலவி வந்தது. அதற்கு காரணம், அவரின் முன் கோபம், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வது போன்ற விஷயங்கள். 


இப்படியாக தொடர்ந்து பல பிரச்னைகளில் சிக்கி வந்த தனம், அனைத்து வாரங்களிலும் எவிக்‌ஷன் நாமினியாக தேர்வு செய்யப்பட்டு வந்தார். கடந்த வாரம் நடந்த ஸ்வீட் ஸ்டால் டாஸ்க்கில், பெரிய பஞ்சாயத்து வெடித்தது. விக்ரமன் அணியினர் தங்கள் பணத்தை அபகரித்து விடுவார்கள் என்று அதை பாதுகாக்க முடிவு செய்த தனலட்சுமி, கல்லாவில் இருந்த பணத்தை மறைத்து வைக்கலாம் என்று குயின்ஸிக்கு ஐடியா கொடுத்தார். 


இந்த விஷயத்தில், இந்த மாதிரி விளையாடிய தனலட்சுமி உங்களை தண்டிக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களை நான் கண்டிக்கிறேன்” என்று கமல் பேசினார். இதனையடுத்து தனலட்சுமி சோகமாகவே இருந்தார். பின்னர், தனக்கு கொடுத்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி கொண்டதாக பல முறை வருந்தி பேசினார்.










இப்படியே சோகமாக இருந்த தனத்தை, ஆயிஷா சமதானப்படுத்தி பேசியுள்ளார். “ இப்போது நீ எமோஷனலாக 
இருக்கிறாய். இதை தாண்டி, இந்த வீட்டில் நீ எப்படி இருக்கிறாய் என்பதுதான் முக்கியம். அதற்காகத்தான் உன்னை தனியாக கூப்பிட்டு பேசினார்கள். மறுபடியும் சொல்கிறேன். மக்கள் உன்னை ஐந்து வாரமாக பார்த்து வருகின்றனர். நீ காட்டிய மாற்றம் வெளியே யாருக்கும் தெரியாது. அது வெளியே தெரிய இன்னும் சில நாட்களாகும். அப்போதுதான் உனக்கே ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். முதலில், உன்னை பற்றி இங்கே இருப்பவர்களுக்கு புரிய வேண்டும் அப்போதுதான் அபிப்பிராயம் மாறும்” என்று ஆயிஷா அட்வைஸ் செய்தார்.


அதற்கு தனம் , “ கமல் சார் வந்து சொன்னால்தான் இவர்களின் அபிப்பிராயம் மாறும்.” என பதில் பேசினார். சீசனின் ஆரம்பத்தில் அடாவடியாக இருந்த தனம், இப்போது சைலண்டாகி வருகிறார். இதற்கு காரணம், தனத்தின் மனதிற்குள் இருக்கும் எவிக்‌ஷன் பயம்தான். இந்த வாரத்திலும் தனம் எவிக்‌ஷன் நாமினியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு பல மக்கள் ஆதரவு கொடுத்து, அதிக வாக்குகளை அளித்து வருகின்றனர். இதன் மூலமாக மக்களிடையே தனம், நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார் என்பது தெரிகிறது.


மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ‘இது என்னடா பெரிய க்ரிஞ்சா இருக்கு’.. பாகுபலி பிரபாஸாக மாறிய ராபர்ட்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!