பிக் பாஸ் சீசன்-6


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.


நடிகர் ஜிபி முத்து, தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால் பிக் பாஸ் இல்லத்திலிருந்து சிறிது நாட்களுக்கு முன்பு தானாக முன்வந்து வெளியேறினார். சென்ற வாரம், நடிகை சாந்தி பிக்பாஸ் இல்லத்திலிருந்து ’எவிக்ட்’ செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து, பிக் பாஸ் இல்லத்தில் உள்ள பெண்களுக்கு பல நாட்களாக தொல்லையாக இருந்த அசல் கோலார், நேற்று எவிக்ட் செய்யப்பட்டார். 


நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள்


அதிகமான குறை கொண்ட போட்டியாளர்களை நாமினேட் செய்வதை வழக்கமாக கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி,  இந்தவாரம் அசீம், ஆயிஷா, ஷெரின், கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோரை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்தது.  இவர்களில் மிக குறைந்து ஓட்டுகளை பெறுபவர், இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார். சற்று நேரத்திற்கு முன் வந்த இரண்டாவது ப்ரோமோவில்,  ஐந்து போட்டியாளர்களில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை பற்றி பேசிவருகின்றனர்.


ஜாலியாக விளையாடிய போட்டியாளர்கள்:


பல நாட்களாக புயலடித்து வந்த பிக் பாஸ் இல்லத்தில், நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக உள்ளது போன்ற ப்ரமோ வெளியாகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரமோவில், அமுதவானன், க்யின்ஸி, விக்ரமன் உள்ளிட்டோரை சக போட்டியாளர்கள் ஸ்விம்மிங் ஃபூலில் தள்ளி குதூகலமாக தள்ளி விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.





இதில் வேடிக்கை என்னவென்றால், “யார் வந்தாலும் புடிச்சி தள்ளி விடுவோம்..” எனக் கூறும் அமுதவானனையே ஒரே அமுக்காக அமுக்கி அவரைப் பிடித்து தண்ணீரில் தள்ளுவதுதான். 


இந்த ப்ரமோவைப் பார்த்த ரசிகர்கள், “ஒரு வழியா ஒன்னு சேந்துட்டாங்கப்பா..” என போட்டியாளர்கள் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.