”பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு வாய்ப்பு! உடனே vijay.startv.com Login செய்து பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான காரணத்தை வீடியோவாக பதிவு செய்து Upload செய்யுங்கள்” என்ற புதிய அறிவிப்பு வந்துள்ளது 






இந்த ஆடிஷன் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவங்கியது. ஆடிஷன் துவங்கி சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் பல பேருக்கு இதைப்பற்றிய தகவல் தெரியவில்லை. பிக்பாஸில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான காரணத்தை ஒரு வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். சிறந்த நபர்கள் இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். பின் 2 அல்லது 3 நபர்கள் மட்டுமே நேரடி ஆடிஷனில் தேர்வு செய்யப்படுவார்கள். வீடியோ ஆடிஷனுக்கு வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






சற்று நேரத்திற்கு முன்பு,  பிக்பாஸ் சீசன் 6-ன் புதிய லோகோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. விரைவில் பிக்பாஸ் என்ற கேப்ஷனை இதில் பதிவிட்டுள்ளனர்.  முன்னதாக நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி சுனிதா, ஜி.பி.முத்து, தொகுப்பாளினி டிடி, தொகுப்பாளர் ரக்‌ஷன், யாரடி நீ மோகினி கார்த்திக் , பாடகி ராஜலட்சுமி , நடிகை ஸ்ரீநிதி  உள்ளிட்டோர் பங்குபெறவுள்ளதாகவும் தகவல் லீக் ஆனாது. இதுவரை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆனால், தற்போது இருவரும் அவர்களின் பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளனர். இடையில் சில நாட்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதனால் இம்முறை 6 சீசனை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம்.