பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள ராப் பாடகரான அசல் கோலார்பல கோளாறான சம்பவங்களை செய்துவருவதால், நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைப்பெற்ற அனைத்து சீசன்களிலும் பெண்களுடன் மட்டுமே பழகும் ஒரு ஆண் போட்டியாளர் இருப்பார். பொதுவாக மற்ற சீசன்களில் விளையாட்டாகதான் அவர்கள் பெண்களிடம் பேசி வருவர். ஆனால், இம்முறை அசல் கோளாறு எனும் ஆண் போட்டியாளர், பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களை தொட்டு தடவி வருகிறார்.
முன்பாக, குயின்சி அனைவரிடம் பேசியபோது, அவரின் முழங்கையை அவரின் அனுமதியில்லாமலே தடவி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில், கடுப்பான குயின்சி அவரின் கையை தட்டி விட்டார். அதைதொடர்ந்து, மகேஸ்வரியின் அருகில் அமர்ந்து, அவரின் முட்டியை கூசுவதுபோல் தடவினார். அடுத்து, நந்தினியின் கைகளை விடாமல் பிடித்து கொண்டு இருந்தார். இவர் தேடி தேடி, பெண்கள் இருக்கும் இடத்திலேயே சென்று அமர்ந்து அவர்களை கட்டிப்பிடித்து மன்மதலீலை வேலைகளை செய்துவருகிறார்.
இதனால், மக்கள் பலர் “ அவனுக்கு ரெட்-கார்ட் கொடுங்க, இவன் ஒரு பொறுக்கி, பெண்களை கட்டிப்பிடித்துக்கொண்டு இவன் செய்யும் வேலைகள் அறுவெறுப்பை தருகிறது. கமல்ஹாசன் சார், இவனை எதிர்த்து ஏதாவது கேளுங்கள்.”என்று அவர்களின் ஆதங்கத்தை ட்வீட் செய்து வருகின்றனர்.
ஜி.பி முத்து, மக்களின் மனதில் இருக்கும் கேள்வியை அசல் கோலாரிடம் நேரடியாக கேட்டுவிட்டார். “ தம்பி உங்களுக்கு ஆம்பளையே பிடிக்கமாட்டுது. நீங்க ஏன் பொம்பள பிள்ளைங்க பக்கதிலே உக்காந்து இருக்கீங்க” என்று கேள்வி கேட்டார். லீலைகளை செய்து வரும் அசல் கோலார், தனலட்சுமியுடன் அவரே சென்று சண்டை போடுகிறார். முன்பாக மற்றவர்கள் சண்டைக்கு வந்தால் கூட அமைதியாக இருக்கும் இவர் ஓவராக கொந்தளித்து வருகிறார்.