பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான மணிகண்டாவை காண வருகை தந்த குடும்பத்தினரோடு அவரது அக்கா ஐஸ்வர்யா ராஜேஷூம்  வந்துள்ளார்.


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த வாரம், ஃப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் ஃப்ரீஸ் ரிலீஸ் என்ற டாஸ் நடைபெறும்; இதில் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவர்; பல நாள் குடும்பத்தை காணாமல் இருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த டாஸ்க் ஒரு வரபிரசாதமாக அமைகிறது.


அந்தவகையில் இந்த வாரத்தில் ப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. நேற்றைய தினம், மைனா நந்தினியின் கணவர், அமுதவாணனின் குடும்பத்தினர் வந்தனர். அமுதவாணனின் குடும்பத்தினர் வந்தபோது, அவர்களை பார்த்த அமுது பெரிதாக எதுவும் உணர்ச்சிவசப்படவில்லை என்று நெட்டிசன்கள் தங்களின் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.


தற்போது, இன்றைய தினத்தில் வந்த முதல் ப்ரோமோவில் ரச்சித்தாவின் அம்மா மற்றும் அப்பா ஆகியோர் வந்தனர். அவர்களை கண்ட ரச்சித்தா உணர்ச்சிவசப்பட்டு அழத் தொடங்கினார். பின்னர் அவரின் அம்மாவின் மடியில் தூங்கி பிக்பாஸ் ரசிகர்களையும் உணர்ச்சிவசமடைய செய்தார்.






இரண்டாவது ப்ரோமோவில், மணிகண்டாவின் மகன், மனைவி மற்றும் அம்மா வந்தனர். பலரும் இந்த ப்ரோமோவை பார்த்து, என்னடா ஐஸ்வர்யா ராஜேஷை காணும், என்று நினைத்து கொண்டிருந்த வேளையில், சற்றென்று வந்து இன்பதிர்ச்சி கொடுத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.




இந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், அமுதவாணன், கதிரவன், மணிகண்டா, நந்தினி, ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் எலிமினேஷனுக்கான நாமினிஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், ஐஸ்வர்யா ராஜேஷை உள்ளே அழைக்கத்தான் மணிகண்டாவை உள்ளே வைத்திருக்கின்றனர் என்ற பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் நிலவிவருகிறது என்பது குறிப்பிடதக்கது.