Bigg Boss 5 Tamil Day 54 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை அடுத்து, நவம்பர் 21-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரின் மகளான ஷ்ருதி ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. அல்லது கமலே ஆன்லைன் வழியாக இந்த வார இறுதி எபிசோடை தொகுத்து வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசனில் இந்த வார இறுதி எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இப்போது அது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, 2019-ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் தெலுங்கு சீசனின் சிறப்பு எபிசோடை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால், அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த் ஃபார்மெட் தெரியும் என்பதால் ரம்யா கிருஷ்ணனே தமிழ் நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடை அவரே தொகுத்து வழங்கி இருக்கிறார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்