Bigg Boss 5 Tamil Day 54 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை அடுத்து, நவம்பர் 21-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார்.


இந்த வாரத்தின் முதல் நாளன்று தலைவர் போட்டிக்கான விளையாட்டும் நாமினேஷனும் நடைபெற்றது. தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் அபினய், வருண், தாமரை, இமான், அக்‌ஷரா மற்றும் ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அபினய், இந்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்புமாநாடு படம் எப்படி இருக்கு..?


அதனை தொடர்ந்து, இந்த வாரத்திற்கான நாமினெச்ஷன் நடைபெற்றது. அதற்கு முன்பு, தலைவராகும் தகுதி தாமரைக்கு இல்லை என ப்ரியங்கா அவரை வம்பிழுக்க, வீடே இரண்டானது. அடுத்து நாமினேஷன் நடைபெற்றது. இதில், ப்ரியங்கா, தாமரைச் செல்வி, ஐக்கி பெர்ரி, நிரூப், இமான், பாவனி ஆகியோர் நாமினேட்டாகினர். இந்நிலையில் 54வது நாளுக்கான கடைசி ப்ரொமோ வெளியானது. ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய அபிஷேக் மீண்டும் கம் -பேக் கொடுத்தார். இந்நிலையில், இந்த வாரம் புதிய ஒரு போட்டியாளரை வீட்டிற்குள் அனுப்பி இருக்கிறது பிக் பாஸ் குழு. பெரிய திரை, சின்னத்திரை நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் புதிய போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். அதனை தொடர்ந்து இன்று பிக் பாஸ் வீட்டில் ‘உண்மையை சொல் அல்லது சொல்வதை செய்’ விளையாட்டை விளையாடுகின்றனர்.


அப்போது, ராஜூ அபினய்யிடம் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர், “பாவனியை லவ் பண்றியா?” என கேட்க, அபினய்யும் பாவனியும் ஷாக் ஆவது போன்ற ப்ரொமோ வெளியாகியுள்ளது. எனினும், ராஜூ உண்மையாகவே அப்படி கேட்டாரா அல்லது இது ப்ரொமோ கட்டா என்பது எபிசோடில் தெரியவரும்.


இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு.. 















ப்ரொமோ:2















ப்ரொமோ:1





















































































































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண