Bigg Boss 5 Tamil Day 50 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை அடுத்து, நவம்பர் 21-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த வாரத்தின் முதல் நாளன்று தலைவர் போட்டிக்கான விளையாட்டும் நாமினேஷனும் நடைபெற்றது. தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் அபினய், வருண், தாமரை, இமான், அக்ஷரா மற்றும் ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதனை தொடர்ந்து, இந்த வாரத்திற்கான நாமினெச்ஷன் நடைபெற்றது. இதில், தாமரைச் செல்விக்கும், ப்ரியங்காவுக்கும் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இந்நிலையில், இன்றைய எபிசோடில் யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதும், யார் எல்லாம் நாமினேஷனில் இடம் பிடிப்பர் என்பதும் தெரிந்துவிடும்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நிகழ்ச்சிகளை கமல் பங்கேற்று தொகுத்து வழங்குகிறார். இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சை எடுத்து கொள்ள இருக்கிறார். இதனால், இந்த வார எபிசோடை யார் தொகுத்து வழங்குவார்கள், மாற்று தொகுப்பாளரை பிக் பாஸ் தேர்வு செய்யுமா என்பது இனி தெரிய வரும்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
ப்ரொமோ:2
ப்ரொமோ:1
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்