Bigg Boss 5 Tamil: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி..?

விஜய் டிவியின் ஸ்டார் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக மாகாபா.ஆனந்த் தொகுத்து வழங்கியுள்ளார்.

Continues below advertisement

பிக்பாஸ் 5ஆவது சீசனில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பிக்பாஸ். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், இந்த தொடரின் 5வது சீசன் வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் 5 சீசனுக்கான ப்ரோமா கடந்த வாரம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் பற்றி இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் ஸ்டார் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பிக்பாஸ் 5ஆவது சீசனில் பிரியங்கா பங்கேற்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதை மறைமுகமாக உறுதிசெய்தார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பட்டம் வென்ற கனி, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு துறைகளிலும் மிகவும் பிரபலமான 30 நபர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்காக தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அவர்களில் இருந்து இறுதிகட்ட போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 சீசன்களிலும் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும், பல்வேறு புதிய விதிகள் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக பல்வேறு புதிய அம்சங்களுடன் பிக்பாஸ் வீடு அரங்கு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் யார்? யார் ? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாதமே நடைபெற்று வருகிறது. 

 

 

 

Continues below advertisement