விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த தொடருக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனின் கிராண்ட் ஃபினாலே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் இதுவரை நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்ஷரா, வருண், சஞ்சீவ், இறுதியாக தாமரை என மக்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம் எலிமினேட் செய்யப்பட்டனர்.
கடந்த 2 வாரம் முன்பு நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் தற்போது 102 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருந்த போட்டியாளர்களில், சிபி 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்தநிலையில், பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டியில், நிரூப் நந்தகுமார், பிரியங்கா தேஷ்பாண்டே, அமீர், ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனி ரெட்டி உள்ளிட்ட ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் இன்று இறுதி போட்டியில் களமிறங்குகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிவிட்டது. தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து போட்டியாளர்களும் கலர் கலர் வண்ண உடையில் ஜொலித்த ப்ரோமோவை விஜய் டிவி சமீபத்தில் வெளியிட்டது.
ஃபைனலிஸ்டுகளின் பயணம் காட்டப்படும் இந்த வேளையில் அபிஷேக் மிஸ் ஆகிறார். வரவில்லையா அல்லது காட்டப்படவில்லையா என்னும் கேள்விகள் எழுந்து வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்