Bigg Boss 5 Tamil Winner: பிக்பாஸ் டைட்டிலை தட்டித்தூக்கினார் ராஜு... பிரியங்காவிற்கு இரண்டாவது இடம்!

Bigg Boss 5 Tamil Title Winner: பிக்பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜு வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, பிரியங்கா 2ம் இடம் பிடித்தார். 

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்து இறுதிப்போட்டிக்கு நிரூப் நந்தகுமார், வி.ஜே. பிரியங்கா, அமீர், ராஜூ மற்றும் பாவ்னி ரெட்டி ஆகிய 5 பேரும் முன்னேறினர். இவர்களில், இந்த சீசன் தொடங்கியது முதல் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து பெற்று வந்த ராஜூ என்ற ராஜூ ஜெயமுருகனே டைட்டில் வின்னராகி இந்த சீசனை வெற்றியாளராக வாகை சூடினர். அவருக்கு நிகழ்ச்சியின் தொகுதிப்பாளர் கமல்ஹாசன் பிக்பாஸ் விருதை வழங்கி சிறப்பித்தார். இதன்மூலம் பிக்பாஸ் வின்னர் ராஜூ ரூபாய் 50 லட்சத்தை வென்றுள்ளார்.

Continues below advertisement



மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த பிரம்மாண்ட இறுதிப்போட்டி சற்றுமுன்தான் நிறைவடைந்தது. இதன் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிற நட்சத்திரங்களும் பங்கேற்றனர். பிக்பாஸ் போட்டியின் இதற்கு முந்தைய நான்கு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. இந்த சீசனின் தொடக்கத்தில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, வருண், அக்‌ஷரா, சஞ்சீவ் மற்றும் தாமரை ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவர் மத்தியிலும் கடந்த 100 நாட்களாக விதவிதமான போட்டிகளை பிக்பாஸ் தொடர்ந்து நடத்தியது. இவர்களின் செயல்பாடுகள் பொறுத்தும், இவர்கள் பிறருடன் நடந்துகொண்ட விதத்தாலும் இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் வாக்களித்தனர். அந்த வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் கிராண்ட் பினாலே, எனப்படும் இறுதிப்போட்டிக்கு நிரூப், பிரியங்கா, ராஜூ. பாவ்னி, அமீர் ஆகியோர் முன்னேறினர்.



இவர்களில் ராஜூவின் நகைச்சுவையான பேச்சும், நடவடிக்கையும் ரசிகர்கள் பலரையும் அவர் பக்கம் திருப்பியது. இதனால், ஆரம்பம் முதலே ராஜூவிற்கு என்று சமூக வலைதளங்களிலும் ஆதரவாகவே ரசிகர்கள் செயல்பட்டனர். இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர்களில் ராஜூ என்ற ராஜூ ஜெயமுருகன் வெற்றியாளர் என்று அறிவிப்பை வெளியிட்டதும் அரங்கமே அதிர்ந்தது. பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் இரண்டாவது இடத்தை பிரியங்கா பிடித்தார். இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பாவ்னி பெற்றார்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் பிக்பாஸ் சார்பில் வாழ்த்துகளும், பதக்கங்களும், பரிசுத்தொகைகளும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement