விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்  நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த தொடருக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனின் கிராண்ட் ஃபினாலே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 


கடந்த 2 வாரம் முன்பு நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் தற்போது 102 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருந்த போட்டியாளர்களில், சிபி 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.


இந்தநிலையில், பிக் பாஸ் தமிழ் 5 இறுதிப் போட்டியில், நிரூப் நந்தகுமார், பிரியங்கா தேஷ்பாண்டே, அமீர், ராஜு ஜெயமோகன் மற்றும் பாவனி ரெட்டி உள்ளிட்ட ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் இன்று இறுதி போட்டியில் களமிறங்குகிறார்கள். 






இறுதிப் போட்டியாளர்கள் 5 பேருக்கும் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பரிசு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.முதலில் ராஜு மோகனுக்கு கமல்ஹாசன் பேனாவையும், பாவனிக்கு கைக்காரத்தையும் அன்புப் பரிசாக வழங்கினார்.


அதனைதொடர்ந்து மக்கள்  அளித்த ஓட்டுகளின் அடிப்படையில் முதல் நபராக நிரூப் நந்தகுமார் வெளியேற்றபட்டார். அதன் பிறகு போட்டியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கலக்கபோவது யாரு போட்டியாளர்கள் கொண்டு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை இமிடேட் செய்து கிண்டல் செய்தனர். 






நாஞ்சில் விஜயன் தாமரை போன்றும், அதில் தாமரை, ஓவரா ஆக்டிங் பண்ணாதீங்க என்று தெரிவித்துள்ளனர். அதேபோல், சிபின்னு பேரு வைக்குறதுக்கு பதிலா.. சிட்டின்னு பேரு வெச்சிருக்கலாம் என்று சிபியையும், முடிஞ்சா நான் பிக்பாஸையே எலிமினேட் பண்ணிடுவேன் என்று அபிஷேக்கையும் கிண்டல் செய்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண