Bigg Boss 5 Tamil Day 9 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று முதல் பிக் பாஸ் சீசன் 5 சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஒன்பதாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. இதில், ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் கேங் மீட்டில் பேசிக் கொள்வது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் ஆகியோர் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து கொண்டு பேசி வருகின்றனர். அப்போது ப்ரியங்கா, “நம்ம கேங் ஃபார்ம் பண்ணனும்னு ஃபார்ம் பண்ணல” என சொல்கிறார். அதற்கு கவுண்டர் கொடுத்த அபிஷேக், “இந்த ட்ரியோலாம் இன்னும் கொஞ்ச நாள்தான். மூனு பேர் சீக்கிரம் டபுள் டக்கர் ஆக மாறிடும்” என சொன்னவுடன் நிரூப் நடுவில் புகுந்து, “ஏன்னா, அதுக்குள்ள நீ கிளம்பிடுவே” என சொல்ல சிரிப்புகளை அலறவிடுகின்றனர் ப்ரியங்காவும், நிரூப்பும். கவுண்டருக்கு பதில் தர முடியாமல் சோகமாய் பார்த்து கொண்டிருக்கிறார் அபிஷேக். 


கேங், நாமினேஷன், மீட்-அப் என பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் வருவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்பட தொடங்கியுள்ளது. இதனால், இன்றைய எபிசோடில் பல எதிர்ப்பாராத சம்பவங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


முன்னதாக இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும், தன்னுடைய கருத்துகளை தெறிக்கவிடும் அபிஷேக்கிற்கு கை கொடுத்து ‘தம்ப்ஸ் அப்’ காட்டுகிறார் இமான் அண்ணாச்சி. ப்ரோமோவில் பேசி கொண்டிருக்கும் அபிஷேக், “நடியா சங், வணிதா விஜயகுமார் போல வெளிப்படைத்தன்மையாக இருப்பவர், ஐக்கி பெர்ரியோடு யாராலும் நட்பு பாராட்ட முடியவில்லை, நிரூப் ஒரு விநோத பிறவி, பாவனி நாமினேஷனில் இடம் பெறாததற்கு அவருடைய கதை ஒரு முக்கிய காரணம், மக்களின் பார்வையில் இசை வாணிக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால், அதை அடிக்கடி வெளியே சொல்லிவிடுகிறார்” என பிக் பாக் போட்டியாளர்களை பற்றி தன்னுடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அபிஷேக் பேசுவதை பார்த்தால், பிக் பாஸ் வீடு பழைய பிக் பாஸ் வீடாக உருமாறி வருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண