Bigg Boss 5 Tamil Day 45 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணுவை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், நவம்பர் 14-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார்.


இந்த வாரத்தின் முதல் நாளன்று தலைவர் போட்டிக்கான விளையாட்டும் நாமினேஷனும் நடைபெற்றது. ப்ரியங்கா தலைவராக தேர்வு செய்யப்பட, ஐக்கி, பாவனி, சிபி, நிரூப், இமான், அக்‌ஷரா, இசைவாணி மற்றும் அபினய் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்தனர். இந்நிலையில், ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க்கின் முதல் நாள் விளையாட்டு நேற்று நடந்தது. இதில், பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இந்த விளையாட்டை விளையாடுகின்றனர். இதில், ஏ அணியைச் சேர்ந்த ஒருவரை போல பி அணியில் இருக்கும் ஒருவர் அதே செயல்களை செய்து அப்படியே பின் தொடர்ந்து இருக்க வேண்டும். இதனால், நிரூப் - அபினய், சிபி - அக்‌ஷரா, இசைவாணி - அண்ணாச்சி இடையே போட்டி இருந்தது.


அதனை அடுத்து, இன்று ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க்கின் இரண்டாவது நாள் போட்டி இன்று நடந்துள்ளது. இதில், ப்ரியங்காவின் கண்ணாடியாக மாறி ராஜூ செய்யும் அலைப்பறைகள் சிரிப்பலைகளை தருகிறது. இதனால், இன்றைய எபிசோடில் புகைச்சலும், சிரிப்பும் கலந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு.. 















ப்ரொமோ:2















ப்ரொமோ:1
































































































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண