Bigg Boss 5 Tamil Day 40 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ஆம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக், சின்னப்பொன்னை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரத்திற்கான தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாணயத்தை பயன்படுத்தி இசைவானி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். 


அதனை அடுத்து, 40வது நாளுக்கான கடைசி ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. நேற்று பிக்பாஸ் வீட்டில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. முதல் பாகத்தில், பாசிடீவான விருதுகள் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பாகம் இன்று நடைபெற்றிருக்கிறது. இதில், “விஷ பாட்டில், தொட்டா சிணுங்கி” போன்ற நெகடீவ் விருதுகள் வழங்கப்பட்டது. இதனால், பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் கடிந்து கொள்கின்றனர். 


மேலும், முகத்திற்கு நேராக கருத்துகளை சொல்ல தைரியம் இல்லாமல் தனி தன்மையை இழந்து விளையாடும் இரண்டு போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டில் தேர்வு செய்தனர். இதில், ராஜூவும் அண்ணாச்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக கார்டன் ஏரியாவில் அமர வைத்து, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தண்ணீர் ஊற்றுகின்றனர். இது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு.. 



























ப்ரொமோ:2



























ப்ரொமோ:1

























































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண