Bigg Boss 5 Tamil Day 34 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக்கை அடுத்து சின்னப்பொன்னு மூன்றாவதாக எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், தீபாவளி நாளான நேற்று பிக் பாஸ் சிறப்பு எபிசோட் நான்கு மணி நேரம் ஒளிபரப்பானது.
அதனை அடுத்து, 34வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. சனிக்கிழமை என்பதால், கமல் ஹாசன் வருகை தந்திருக்கும் இந்த எபிசோடில், இன்றைக்கு பிக் பாஸ் டாஸ்க்குகள் பற்றி போட்டியாளர்களிடம் கலந்துரையாட இருக்கிறார். தீபாவளி ஸ்பெஷல் எபிசோட் வேற 4 மணி நேரம் ஒளிபரப்பான நிலையில், “பிக் பாஸ் கொளுத்து போட்ட பட்டாசு எல்லாம் நல்ல வெடிக்குதுனு நெனைக்கிறேன். உள்ள விளையாடுறவங்ககிட்ட வேகமும், வியர்வையும் கூடியிருக்கு. தீபாவளியை முன்னிட்டு எவிக்ஷன் இருக்காதுனு சிலர் நினைக்கலாம். ஏன் இருக்காது? கண்டிப்பா இருக்கும்!” என திட்டவட்டமாக சொல்லி முடிக்கிறார் கமல். இதனால் இன்றைய எபிசோட் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்