Bigg Boss 5 Tamil Day 26 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 24-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, சின்னப்பொன்னா, ஐக்கி பெரியா என்ற நிலையில் இருந்தபோது அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் நாடியாவை அடுத்து இரண்டாவது எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீட்டில், இந்த வாரத்திற்கான நாமினேஷனை போட்டியாளர்கள் பதிவு செய்தனர்.


அதனை அடுத்து, 26வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. நாணயம் விளையாட்டை அடுத்து இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் பட்டிமன்ற விளையாட்டு ஆரம்பமாகி உள்ளது. வழக்கமான அதே ஃபார்மெட்டில் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு, நடுவராக ஒருவரை நிறுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சம்பவங்களை பேச சொல்லி இருக்கிறார் பிக் பாஸ். 


இதனால், இரு அணிகளாக பிரிந்திருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள், ஒருவரை ஒருவர் கடிந்து கொள்கின்றனர் இந்த வார ஹைலைட்டான நாணய பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்த போட்டியிலும், தாமரைச் செல்வி - ஸ்ருதி இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டையை கமல்தான் முடித்து வைக்க வேண்டும் என ரசிகர்களும் நொந்து கொள்கின்றனர். 


இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..

































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண