Bigg Boss 5 Tamil Day 19 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் பல திருப்பங்களை கொண்டிருந்தது. அதோடு, சிபி, பாவனி, ராஜூ, இசை ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட, இந்த வாரத்திற்கான தலைவராக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்நிலையில், 19வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. இதில், சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடும் போட்டியாளர்களின் பெயர்களை பதிவிடுமாறு ஒவ்வொரிடமும் கேட்கப்படுகிறது. இதில், ப்ரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோர் எதிர்பாராத விதமாக அவர்களது நண்பர்களின் பெயர்களையே குறிப்பிட்டனர். ப்ரியங்கா நிரூப், அபிஷேக்கையும், அபிஷேக் நிரூப்பையும், நிரூப் ப்ரியங்காவையும் குறிப்பிடுகின்றனர். “நண்பர்களே என்றாலும், இந்த பெயர்தான் அடிப்படுது” என நிரூப் சொல்லிக்கொண்டே ப்ரியங்காவின் பெயரை எழுதுகிறார். 


ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் என க்ரூபிசம் அமைத்த நண்பர்கள் குழு இப்படி செய்வது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் ஒருவித போட்டி யுக்தியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அதிகரித்துள்ளது.


இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..



ப்ரொமோ 1:






ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண