Bigg Boss 5 Tamil Day 19 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் பல திருப்பங்களை கொண்டிருந்தது. அதோடு, சிபி, பாவனி, ராஜூ, இசை ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட, இந்த வாரத்திற்கான தலைவராக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்நிலையில், 19வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. அதில், 'விளையாடு இல்ல வெளிய ஓடு' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. போட்டிப்போடும் நபர்கள் எப்படி விளையாட கூடாது என்ற வகையில் யார் விளையாடுகிறீர்கள் என்பதற்கான வாக்கெடுப்புதான் இந்த ’விளையாடு இல்ல வெளிய ஓடு’ டாஸ்க். இந்த டாஸ்க்கில் நிறைய முறை ப்ரியங்கா, நிரூப், அபிஷேக்கின் பெயர்கள் அடிப்பட்டது. 


”தூங்குற நேரத்துல பேசிட்டு பகல் நேரத்துல தூங்குறது” என கூறி சிபி ஒருவருக்கு வாக்களிக்கிறார். அதனை அடுத்து, ’இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்’ என்ற பெயர் ப்ரியங்காவுக்கும், நிரூப்புக்கும் வழங்கப்பட்டது. ’ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங்’ என்ற பெயர் அபிஷேக்கிற்கு வழங்கப்பட்டது. ’நானாதான் இருக்கேன், அதான் வெட்டியா பொழுதை கழிக்கிறேன்’ என்ற பெயர் ஐக்கி பெர்ரிக்கும் வழங்கப்பட்டது. 


ப்ரொமோவில் பார்க்கும்போது சிரித்து கொண்டு இந்த பெயர்களை மாட்டிக் கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்கள், நேரம் தாழ்த்தி புகைச்சலை ஏற்படுத்துவார்கள் அது மோதலாக வெடிக்கும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது. 


இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண