Bigg Boss 5 Tamil Day 17 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் பல திருப்பங்களை கொண்டிருந்தது. அதோடு, சிபி, பாவனி, ராஜூ, இசை ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட, இந்த வாரத்திற்கான தலைவராக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், 17வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. அதில், “அக்ஷராவ உங்கிட்ட இருந்து பிரிக்க இரண்டு நிமிஷம் ஆகாது” என ராஜூவைப் பார்த்து அபிஷேக் கேட்க, “உங்க கூட இருக்கவங்களே உங்கள செஞ்சிட்டு இருக்காங்க” என ப்ரியங்காவைப் பார்த்து ராஜூ எச்சரிக்க, “எனக்கும் தெரியுது” என ப்ரியங்கா ஆமோதிக்கிறார்.
ஆனால், அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே நடுவே குறுக்கிட்ட அபிஷேக், “இவளோட (ப்ரியங்கா) ஒட்டினாதான் என் மூஞ்சி டிவில தெரியும்னு சொல்றேன்” என ஓயாமல் பேச அண்ணாச்சி நடுவே கமெண்ட் செய்தார். அப்போது அவர், “இவங்ககூட சேர்ந்ததான் உன் மூஞ்சி டிவில தெரியும்னு சொல்றது....கேவலமான விஷயம்” என இழுக்க, ”அப்படியே வச்சுக்கோங்க” என கடுகடுத்தார் அபிஷேக். இன்றைய நாளின் முதல் ப்ரொமோவே வாக்குவாதத்தோடு தொடங்கி உள்ளதால், இன்றைய எபிசோட் காரசாரமாக இருக்கும் என தெரிகிறது.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள்: பாவனி, அபிஷேக், அக்ஷரா, சின்னப்பொண்ணு, ப்ரியங்கா, தாமரை, ஐக்கி, இசைவாணி, அபினய்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்