Big Boss Pradeep: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பெண்களின் பாதுகாப்புக்காக பிரதீப் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் கூறியதற்கு, கமலின் படங்களில் லிப்லாக் சீன் இருக்கும் என யுகேந்திரன் மனைவி ஹேமா மாலினி சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார். 


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரதீப் இருப்பது தங்களுக்கு பயமாக இருப்பதாகவும், அவர் தவறான வார்த்தைகள் உபயோகிப்பதாகவும், சக போட்டியாளர்களை இழிவாக பேசுவதாகவும் பிரதீப் மீது பெண் போட்டியாளர்கள் உட்பட அனைவரும் குற்றம்சாட்டினர். 


வாரத்தின் இறுதி நாளில் கமலிடம் போர்க்கெடி் தூக்கிய போட்டியாளர்கள் கமலுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். போட்டியாளர்களின் குற்றச்சாட்டுகளை கேட்டு கொண்ட கமல்ஹாசன், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். அப்போது பேசிய கமல், பெண் போட்டியாளர்களின் பாதுகாப்பு காரணமாக பிரதீப்பை வெளியேற்றியதாக கூறினார். 


இந்த சூழலில், பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு யுகேந்திரன் மனைவி ஹேமமாலினி சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதில், பெண்களின் பாதுகாப்புக்காக தான் பிரதீப் வெளியேற்றியதாக கமல் கூறுகிறார். புன்னகை மன்னன் படத்தில் நடிக்கும்போது நடிகை ரேகாவிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு கமல் லிப் கிஸ் கொடுத்தார். அப்போது ரேகாவுக்கு 16 வயது தான் இருந்தது. அந்த படத்தில் மட்டும் இல்லாமல், கமல் நடித்த பல படங்களிலும் நடிகையுடனான லிப் கிஸ் சீசன் இருக்கும். இப்படி இருக்கும்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவது எனக்கு புரியவே இல்லை” என்றார். 








கமல் நடித்த புன்னகை மன்னன் படம் 1986ம் ஆண்டு திரைக்கு வந்தது. கே. பாலச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் நடித்த ரேகா, கமலுடன் நடித்த அனுபவம் குறித்து கடந்த 2019ம் ஆண்டு பேட்டியளித்தார். அதில், புன்னகை மன்னன் படத்தில் தனது அனுமதி கேட்காமல் கமல் முத்தம் கொடுத்ததாகவும், தனக்கு தெரியாமல் அந்த காட்சி எடுக்கப்பட்டதாகவும், அதன்பின்னர், மற்ற படங்களில் நடிக்கும்போது பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொண்டதாகவும் கூறியிருந்தார். ரேகாவின் இந்த பேச்சு இணையத்தில் சர்ச்சையானது. இந்த நிலையில், பிக்பாஸ் பிரதீப் விஷயத்தில் கமலின் மீதான சர்ச்சையை குறிப்பிட்டு ஹேமமாலினி பேசியுள்ளார். 




மேலும் படிக்க: 32 Years Of Thalapathy - Guna: நட்புக்காக களம் கண்ட ரஜினி.. காதலுக்காக உருகிய கமல்.. இன்றைய நாளில் நடந்தது என்ன?


Neeya Naana: ‘எங்க அப்பாவை தான் முதன்முதலா அடிச்சேன்’ - நீயா நானாவில் அதிர்ச்சி கொடுத்த இளைஞர்!