Big Boss 7 Tamil: கடந்த மாதம் ஒன்றாம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். அதேநேரம் பவா செல்லதுரை விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 


இந்தச் சூழலில் நடிகர் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி என 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக சென்றுள்ளனர். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் 18 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த சீசனில், பிக்பாஸ் வீடு, சிறிய பிக்பாஸ் வீடு என போட்டியாளர்கள் பிரித்து வைத்திருப்பதால், சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. 


போட்டியாளர்களுக்கான டாஸ்க் மற்றும் சமையல் நேரங்களில் பிரதீப் மற்றவர்களிடம் எல்லை மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் கூல் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரதீப், தவறான வார்த்தையை விட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பூர்ணிமா, மாயா, மணி, ஜோவிகா, ஐஷூ, நிக்சன், விஷ்ணு உள்ளிட்ட போட்டியாளர்கள் கமலிடம் கூறியுள்ளனர். 






அதேநேரம் கூல் சுரேஷ், விசித்ரா, தினேஷ் உள்ளிட்டோர் பிரதீப்புக்கு ஆதரவாகப் பேசினர். இந்த சூழலில் பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிரதீப்புடன் இணைந்து வைல்டு கார்டு எண்ட்ரியில் உள்ளே சென்ற பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதியும் இந்த வாரம் எவிக்‌டாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க: Bigg Boss 7 tamil: கூல் சுரேஷ் Vs பிரதீப்.. உரிமை Vs நம்பிக்கை துரோகம்.. யார் சரி? வைரலாகும் வீடியோ!


Kamal Haasan Birthday: இது நவம்பர் மாதம் அல்ல, நம்மவர் மாதம்.. கமலா திரையரங்கில் பிரமாண்டமாய் ‘விருமாண்டி’! எப்போது தெரியுமா?