டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை கடந்த ஜனவரி மாதம் இறுதியில் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வந்தது. இந்த 2022 ஆம் ஆண்டின் முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன், கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தொகுத்து வழங்கி வந்தார்.
அதன்பிறகு, நடிகர் கமல்ஹாசன் தனது தனிப்பட்ட காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக, கமலுக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுப்பாளராக களமிறக்கியது விஜய் டிவி. தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் பெரிதாக இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தநிலையில், அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக சாண்டி மாஸ்டர், சதீஸ், தீனா போன்ற பிரபலங்களை வைல்ட் கார்டு என்ட்ரியாக கொண்டு வரப்பட்டனர்.
இந்தநிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கிய அடுத்த நாளே, அந்த வீட்டிற்குள் புது பூகம்பம் தொடங்கியது. அதில், புகைபிடிக்கும் அறையில் மனதை அமைதி கொள்வதற்காக அபிநய், நிரூப்,சாரிக், அபிராமி, பாலாஜி என அனைவரும் தங்களது கையில் சிகரெட் வைத்து புகைவிட்ட காட்சி இணையத்தில் படு வைரலானது . இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த வீடியோ கீழ் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வந்தனர்.
தற்போது, அபிராமி தனது இணைய பக்கத்தின் மூலம் லைவ் வந்தார். அதில், ரசிகர் ஒருவர் அபிராமியிடம் நீங்கள் சிகரெட் அடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அபிராமி, "எனக்கு ஓபன்னா பேசுறதுக்கு எந்த ஒரு பயமும் இல்லை. அந்த வீட்டுக்குள்ளே எவ்வளவு ஸ்ட்ரஸ்ஸா இருக்கும்னு உங்க யாருக்கும் தெரியாது. அது என்னுடைய விருப்பம், அதை கேட்க யாருக்கும் உரிமையில்ல. ரோட்டில் எத்தன பசங்க தம் அடிக்கிறாங்க. ஆனா, இத ஒரு பொண்ணு பண்ணா மட்டும் ஏன் கேட்குறீங்க என்று தெரிவித்தார்.
மேலும், உங்களுக்கும் பாலாஜிக்கும் ஸ்மோகிங் ரூம்ல என்ன நடந்துச்சுன்னு மற்றொரு ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கும் பதிலளித்த அபிராமி, அதெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை என்று முதலில் சொல்லி முடித்துவிட்டார். அதன்பிறகு பேசிய அவர், அது எப்படிங்க நாலு பேர் பாக்குற ஷோல ஒருத்தவங்க அப்படி பண்ணுவாங்க. நான் மட்டும் இல்ல. வேற யாரு அந்த இடத்துல இருந்தாலும் அப்படி பண்ணவும் மாட்டாங்க. பொது இடத்துல எப்படி நடந்துக்கணும் இங்கீதம் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்