பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆதிரை மீண்டும் உள்ளே வர இருப்பதால் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக  சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் உள்ளது. கிட்டதட்ட இந்த நிகழ்ச்சியானது 9 சீசனாக  ஒளிபரப்பாகி வருகிறது.   20 போட்டியாளர்கள் நேரடியாகவும், 4 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் உள்ளே வந்தனர். அதில் நந்தினி அவராகவே வெளியேறினார். தொடர்ந்து பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, அகோரி கலையரசன், துஷார், பிரவீன் குமார், திவாகர், கெமி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.  

அதில் தற்போது FJ, வியானா, அமித் பார்கவ், திவ்யா, பிரஜின், கனி திரு, கம்ருதீன், பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், திவ்யா ஜோ, அரோரா,கானா வினோத், சுபிக்‌ஷா, சபரி நாதன், சாண்ட்ரா உள்ளிட்டோர் உள்ளே விளையாடி வருகின்றனர்.  இப்படியான நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு மக்களிடம் செல்லவில்லை என சொல்லப்படுகிறது. இதனை ஈடுகட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி குழு பல்வேறு ஆயுதங்களை கையில் எடுத்துள்ளது. 

Continues below advertisement

அதன்படி முந்தைய சீசன்களில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட போட்டியாளரை மீண்டும் உள்ளே அழைத்து வந்து ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருந்தது. அது வெற்றிகரமாக நடைபெற்றும் இருக்கிறது. இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்ட ஆதிரை மீண்டும் உள்ளே வர உள்ளார் என்பது எதிர்பாராத ட்விஸ்டாக மாறியுள்ளது. 

பழைய சர்ச்சை 

இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதலில் ஆதிரை, FJ தான் பேசுபொருளாக இருந்தார்கள். அதிலும் ஆதிரை FJவுடன் காட்டிய நெருக்கம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இரட்டை அர்த்த வசனத்தில் பேசியது தொடங்கி நெருக்கம் காட்டியது வரை சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். ஆனால் அதனை ரசிகர்கள் விரும்பவில்லை. காரணம் பிக்பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களில் சிலரை விட ஆதிரை நன்றாகவே செயல்பட்டு வந்தார். அவரை கண்டிக்காமல் வெளியேற்றியது ஏமாற்றமளித்தது. 

வியானாவுடன் காதலா?

இந்த நிலையில் FJ கடந்த 2 வாரமாக கேப்டனாக செயல்பட்டு வந்தார். முதல் வாரம் சரியாக செயல்பட்ட அவர், இரண்டாவது வாரம் சக போட்டியாளரான வியானாவுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. வியானாவின் ஆடைகளை காயப்போடுவது, அவருக்கு சாப்பாடு ஊட்டு விடுவது, ஷூ எடுத்து கொடுப்பது என கேப்டனாக இல்லாமல், வியானாவின் அஸிஸ்டெண்டாக செயல்பட்டார். 

அதேசமயம் ஓரிடத்தில் FJ கட்டிப்பிடிக்கும்போது  வியானா சட்டென கேமரா தன்னை பதிவு செய்வதை கண்டு எங்க அம்மா என்னை கொன்னு போட்டுருவாங்க என கூறினார். எனினும் வியானா- FJ  உறவு புரியாத புதிராக மாறியுள்ளது. இந்த வாரம் FJ  வீட்டின் கேப்டன், இந்த வார ஸ்கூட் டாஸ்க்படி அவர் துணை வார்டன் என இரண்டு கேரக்டர் செய்ய வேண்டும். ஆனால் வேலை செய்யாமல் வாரம் முழுக்க வியானாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இதனை வாரக் கடைசியில்  சக போட்டியாளர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதியும் குற்றச்சாட்டாக பதிவு செய்தார். 

இப்படியான நிலையில் ஆதிரையை மீண்டும் உள்ளே விட்டால் நிச்சயம் FJ சிக்கலில் மாட்டுவார். நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக செல்லும் என ரசிகர்கள் கணித்துள்ளனர். ஒரு பக்கம் வியானா, மறு பக்கம் ஆதிரை நடுவில் மாட்டிய எலியாக FJ சிக்கப்போகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.