விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கியவர் ஜாக்குலின். ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அதுவும் நம்பர் 1 நடிகையான நயன்தாரா நடிப்பில் வந்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். சமீபத்தில் முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில் தான் 18+ மூவிஸ் பார்த்து வீட்டில் மாட்டிக் கொண்டது குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
2020 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்திய தொற்று தான் கோவிட். இதற்கு நாடு முழுவதும் எத்தனையோ பேர் உயிரிழந்தனர். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவு போடப்பட்டது. அப்போது ஓடிடியில் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். இதில் ஹாலிவுட் படங்களும் இருக்கும். பொதுவாக ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சென்சார் கிடையாது. அதனால் ஆபாச காட்சிகளும் வரும்.
அப்படி படம் பார்க்கும் போது 18+ காட்சிகள் வந்துவிட்டது. அதை பார்க்கும் போது என்னுடைய அம்மாவும் நான் பார்ப்பதை பார்த்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். எனக்கு பிட்டு படம் எல்லாம் பார்க்கும் பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனால், ஓடிடியில் வரும் படங்கள், வெப் சீரிஸ்கள் பார்க்கும் போது அதில் 18+ காட்சிகள் வரும். அதை ஆரம்பத்தில் தயங்கி தயங்கி தான் நான் பார்த்தேன். அதன் பிறகு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

காலேஜ் படிக்கும் போது வெளிநாட்டு படங்கள் பார்ப்பேன். அப்படி நான் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த மாதிரி சீன் வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து என்னுடைய அம்மாவும் வந்துவிட்டாங்க. என்னை பார்த்து என்ன படம் பாக்குற என்று கேட்டாங்க, அந்த நேரம் பாத்து ரிமோட்டும் ஒர்க் ஆகல. பிறகு என்ன செய்ய, ஒரு வழியாக சொல்லி சமாளிச்சேன். திட்டு விழுகும். வாங்கிக் கொண்டு தான் ஆகணும்.
கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கமாட்டேன். அதனால், எனக்கு யாரும் புரபோஸ் பண்ணவில்லை என்று கூறியுள்ளார். நான் விஜய் டிவியில் ஒர்க் பண்ணும் போதிலிருந்து இயக்குநர் நெல்சனை தெரியும். ஒருநாள் நானே அவரிடம் படம் பண்ணுறீங்களா என்று கேட்டேன். அவர் இல்லை, படம் பண்ணினால் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கொஞ்ச நாள் கழித்து அவருடைய டீமிலிருந்து எனக்கு போன் வந்தது. அப்போது தான் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கை ரோல் இருப்பதாக சொன்னார்கள்.
நான் ஒரு முடிவில் தான் இருந்தேன், எந்த ரோல் கொடுத்தாலும் பரவாயில்லை. நடிக்க வேண்டியது தான் என்று தான் நான் நினைத்திருந்தேன். ஆனால், நயன் தாராவுக்கு தங்கை என்று சொன்னதும் நானும் நடித்துவிட்டேன். இதைவிட வேறு என்ன வேண்டும் என்று கூறியுள்ளார்.