கமல்ஹாசன்:


விஜய் டிவியில், கடந்த 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும், என்டெர்டெயின்மெண்ட் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கிய நிலையில், முதல் சீசனில் இருந்து கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் உலக நாயகன் கமல்ஹாசன். இதை தொடர்ந்து, 8-ஆவது சீசன் குறித்த அறிவிப்புகள் வெளியாக துவங்கியதும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன். இந்த இந்த தகவலை விஜய் டிவி தரப்பும் உறுதி செய்தது.


விஜய் சேதுபதி:


கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எண்டு கார்டு போட்டு விட்டதால், இவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள்? என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்த நிலையில், ராதிகா, சரத்குமார் முதல் நயன்தாரா வரை பல பிரபலங்கள் பெயர் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லிஸ்டில் அடிபட்டது. கடைசியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது உறுதியானது. மிகவும் எதார்த்தமாக, அதே சமயம் சாந்தமாக பேசும் குணம் கொண்ட இவர்... இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார்? என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்த நிலையில், முதல் நாளிலேயே நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.



Jacquline: பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை யாரும் படைத்திராத்தை புதிய சாதனை செய்த ஜாக்குலின்!


இந்த சீசனில் கமல் இல்லை என்கிற ஒரு குறை இருந்தாலும், எந்த விதத்திலும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதை குறை சொல்ல முடியாது. காரணம் அந்த அளவுக்கு நேர்த்தியாக தொகுத்து வழங்கி வருகிறார். குறிப்பாக இந்த சீசனில் அரசியல் வாடை இன்றி... முழுக்க முழுக்க ஒரு என்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியாகவே இது செல்கிறது. கமல்ஹாசன் சூச்சம வார்த்தைகளால் தொகுக்கும் சில கேள்விகளை, விஜய் சேதுபதி நேரடியாக கேட்பது வேற லெவல்


தீபக் மற்றும் அருண் எலிமினேட்டட்:


பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய 1 வாரமே எஞ்சியுள்ள நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, தீபக் மற்றும் அருண் ஆகிய இருவர் வெளியேறியுள்ளனர். தீபக்கின் வெளியேற்றம் Unfair  என ரசிகர்கள்   நினைக்கும் வரும் நிலையில், டாப் 5 போட்டியாளராக யார் யார் இருக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.


ஜாக்குலின் படைத்த சாதனை:


இந்நிலையில், சத்தமே இல்லாமல் போட்டியாளர்களில் ஒருவரான ஜாக்குலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாதனை படைத்துள்ளார். அதாவது, கடந்த 15 வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷன் லிஸ்டில் இருந்தபோதும், அவரை ஒவ்வொரு முறையும் மக்கள் காப்பாற்றி வருகிறார்கள். இதற்க்கு காரணம் எளிதில் எதையும் விட்டுக்கொடுத்துவிட கூடாது என்கிற அவரின் மனநிலையில், சில விஷயங்களை ஓபனாக பேசும் குணமும் என்றே கூறப்படுகிறது. மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது ஒவ்வொரு வாரமும் திக் திக் என்ற மனநிலையுடன் விஜய் சேதுபதி முன் அமரும் இவர் ரியல் ஃபைட்டராகவே பார்க்கப்படுகிறார்.