பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நான்காவது நாளில் கெமி மற்றும் வாட்டர்மெலன்ஸ் டார் திவாகர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தன்னை வாட்டர்மெல்ஸ் ஸ்டார் தவறாக பார்த்ததாக கெமி குற்றச்சாட்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வாட்டர்மெலன் ஸ்டார் மீது துப்பிய கமருதின்
இந்த சீசன் தொடக்கம் முதலே வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மீது மற்ற போட்டியாளர்கள் வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். முதலில் குறட்டை விட்டதற்காக அவருடன் பிரவீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்தபடியாக ரம்யா வாக்குவாதம் செய்தார். எஃப்.ஜே வாட்டர்மெலன் ஸ்டாரை வெட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்தார். தற்போது கருதின் வாட்டர்மெலஸ் ஸ்டாரை தொடர்ச்சியாக வம்பிழுத்து வருகிறார். திவாகரின் உடலை வைத்து அவரை உருவகேலி செய்த கமருதின் அவரைப் பார்த்து துப்பியது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்டர்மெலன் ஸ்டார் மீது கெமி குற்றச்சாட்டு
இன்றைய எபிசோடில் கெமி மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் இடையே வாக்குவாதம் ஏற்பட கெமி வாட்டர்மெலன் ஸ்டார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். சண்டையின் போது கெமியை நேரடியாக பார்த்து பேச திவாகர் தவிர்த்து வந்தார். இதனால் கெமி அவரது முகத்திற்கு நேராக சென்று நின்று தன் முகத்தை பார்துத் பேசச் சொல்லி சண்டைபோட்டார். பின் என் வயிற்றை பார்க்கிறார் என வாட்டர்மெலஸ் ஸ்டார் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அவரது இந்த செயலை ஆதிரை மற்றும் பிற போட்டியாளர்கள் கண்டித்தனர். வேண்டுமென்றே வாட்டர்மெலன் ஸ்டார் மீது இப்படி குற்றச்சாட்டு வைத்ததற்கு கெமியை பார்வையாளர்கள் விமர்சித்து வருகிறார்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை பெரும்பாலானவர்கள் விமர்சித்தாலும் பார்வையாளர்களிடம் அவருக்கு பெரியளவில் ஆதரவு கிடைத்துள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கியது. இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டு வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சின்க்ளேர் , ரம்யா ஜோ , பிரவீன் காந்தி , பிரவீன் , எஃப்.ஜே. விஜே பார்வதி , நந்தினி, வியானா , கெமி , கானா வினோத் , ஆதிரை , சுபிக்ஷா , அப்சரா சிஜே , விக்கல்ஸ் விக்ரம் , துஷார் , கனி திரு , சபரி , கமருதின் , அகோரி கலையரசன் ஆகிய 20 போட்டியாளர்கள் பெங்கேற்றுள்ளார்கள்.