தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. 






கடந்த செப்டம்பர் 3-ம் தேதி, முதல் ப்ரோமோ வெளியான நிலையில், இன்று இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. ”ஒரே களேபரம்தான் போங்க, நான் சமையல சொன்னேன்” என கமல் இந்த ப்ரோமோவில் தெரிவித்துள்ளார். இந்த ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக ஆரம்பித்துள்ளது. விரைவில் நிகழ்ச்சி தொடங்கப்படும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே வழக்கமாக சண்டையும், சர்ச்சைகளும் அதிகம் இருக்கும். அந்த வரிசையில், முன்பி வெளியான ப்ரோமாவில், “வீடும் பெருசு... கலாட்டாவும் பெருசு” என கமல் தெரிவிப்பது போல வசனம் வருகின்றது. அதனால், சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது என சொல்லாமல் சொல்லியுள்ளது பிக் பாஸ் குழு. 






பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், டிக்டாக் புகழ் ஜி.பி. முத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஜி.பி.முத்து, பூந்தமல்லியில் பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கத்தின் முன்பு நின்று கொண்டு போஸ் கொடுப்பது போல உள்ளது. ஆனால்,  இது குறித்த அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.


பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.